India | pm-modi | delhi: நாட்டின் ரயில் சேவையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் அதிவேக ரயிலாக, 'வந்தே பாரத்' உள்ளது. இந்த ரயில் மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில்களுக்கு 'நமோ பாரத்' என பெயர் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் ரயில் சேவை, என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பகுதிகள் முழுதும் உள்ளடக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, டெல்லி - காஜியாபாத் - மீரட் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த பிராந்திய விரைவு போக்குவரத்து சேவை இன்று தொடங்கப்படுகிறது.
இது காசியாபாத், குல்தார் மற்றும் துஹாய் நிலையங்கள் வழியாக சாஹிபாபாதை, துஹாய் டிப்போவுடன் இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India’s first regional rapid train to be named ‘Namo Bharat’, to be inaugurated by PM Modi on Friday
இந்த ரயிலுக்கு "நமோ பாரத்" என்று பெயரிப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் தள பதிவில், “நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் 'நமோ பாரத்' #NamoBharat சாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ இடையே 20 அக்டோபர் 2023 அன்று பிரதமர் மோடி அவர்களால் தொடக்கி வைக்கப்படும். நாட்டில் அதி நவீன நகர்ப்புற பயணத்தின் ஒரு புதிய சகாப்தம்.
இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு ரயில் '#நமோபாரத்' ரயில் 180 கிமீ வேகத்தில் மற்றும் 160 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது." என்று பதிவிட்டு இருந்தார்.
82-கிமீ தூரம் கொண்ட பாதையில் 17-கிமீ முதன்மை பிரிவாக சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய் டிப்போ ஆகிய 5 நிலையங்களில் சனிக்கிழமை முதல் பயணிகளுக்கான செயல்பாடுகளைத் தொடங்க உள்ளன. இந்த ரயில்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். தொடங்குவதற்கு, ரயில்களின் அதிர்வெண் 15 நிமிடங்களாக இருக்கும். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் அதிகரிக்கலாம்.
"டெல்லி-காசியாபாத்-மீரட் ரயில் சேவை ரூ.30,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் காசியாபாத், முராத்நகர் மற்றும் மோடிநகர் ஆகிய நகர்ப்புற மையங்கள் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தில் டெல்லியை மீரட்டுடன் இணைக்கும்," பிரதமர் மோடியின் அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“