Advertisment

ஜெய்ஸ்வால், ராகுல் உள்ளே; கோலி டி20 உலகக் கோப்பையில் இல்லை?

டி-20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக வலம் வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, நடைபெறவிருக்கும் டி-20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Indias likely squad for the T20 World Cup 2024 Virat Kohli OUT and Yashasvi Jaiswal KL Rahul IN Tamil News

2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும்?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 T20 World Cup 2024 | Indian Cricket Team: 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

Advertisment

அதன்படி, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதனை தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியானது, அமெரிக்காவின் நியூயார்க் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக உள்ள நிலையில், இந்திய அணி குறித்த பேச்சுக்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த நிலையில், டி-20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக வலம் வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, நடைபெறவிருக்கும் டி-20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

அவரைத் தவிர ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரும் விக்கெட் கீப்பர்-பேட்டர்களாக தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அதற்கு பதிலாக, கே.எல். ராகுல் இடம் பெறுவார். அவரது பேக்-அப்பாக, ஜிதேஷ் சர்மா மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும்? 

தொடக்க ஆட்டக்காரர்கள்: 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் கேப்டனாக ரோகித் சர்மாவை கடந்த மாதம் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்தார். தொடக்க வீரராக களமிறங்கும் அவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரின் தொடக்க ஜோடியாக இருப்பார்.

ஜனவரி 2024 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 22 வயதான ஜெய்ஸ்வால் சுப்மான் கில்லை விட அதிகம் விரும்பப்பட்ட வீரராக இருந்தார். அதனால் அவர் தொடக்க வீரராக களமாடலாம். கில் அவருக்கு பேக்-அப் வீரராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

மிடில் ஆர்டர் பேட்டர்கள்: டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மிடில் ஆர்டரில் உலகின் நம்பர் 1 டி20 பேட்டர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் களமிறங்குவார்கள். சூர்யா 3வது இடத்தில் பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ரிங்கு 6வது இடத்தில் களமிறங்குவார்.

விக்கெட் கீப்பர்கள்: விக்கெட் கீப்பர்-பேட்டராக கே.எல் ராகுல் முதல் விருப்பமான தேர்வாக இருக்கிறார், மேலும் ஜிதேஷ் சர்மா மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரில் ஒருவர் அவருக்கு பேக்-அப் வீரராக இருப்பார்.

ஆல்-ரவுண்டர்கள்: துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபேவுடன் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருப்பார். மேலும் ரவீந்திர ஜடேஜா சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக முதல் தேர்வாக இருப்பார்.

சுழற்பந்து வீச்சாளர்கள்: டி20 உலகக் கோப்பையில் குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் இந்தியாவுக்காக இரண்டு சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.

வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்தியாவின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்க தயாராக உள்ளனர்.

2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: 

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Cricket Team T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment