இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் மைதானம் இருக்கும் பகுதியில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று 2-ம் நாளில் போட்டி தொடங்கி நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடியது. ஆனால், பவுலிங் வீசிய நியூசிலாந்து இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்தியாவின் ஆடும் லெவன் வீரர்களில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What are India’s lowest Test scores at home?
முதல் இன்னிங்சில் அடி மேல் அடி வாங்கிய இந்திய அணி 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் 46 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பறிகொடுத்தது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. கடைசியாக இந்தியா இப்படி குறைந்த ஸ்கோருக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலிய மண்ணில் 2020- 21-ல் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது தான். அடிலெய்டில் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. இருப்பினும், 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.
எனவே, இதுபோன்று குறைந்த ஸ்கோருக்கு இந்தியா ஆல்-அவுட் ஆகுவது இதுமுதல்முறை அல்ல. கடந்த காலங்களில், இந்தியாவின் ஐந்து குறைந்த டெஸ்ட் ஸ்கோர்கள் அனைத்தும் 1948 மற்றும் 1996-க்கு இடையில் வெளிநாட்டு போட்டிகளின் போது மட்டுமே பெற்றது. ஆனால், முதல் முறையாக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் குறைந்த ஸ்கோருக்கு ஆட்டமிழந்துள்ளது.
1987 ஆம் ஆண்டில் டெல்லியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்தியா 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மீண்டும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு 2008 இல் அகமதாபாத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்தியா 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது.
சொந்த மண்ணில் இந்தியாவின் குறைந்த டெஸ்ட் ஸ்கோர் பட்டியல்
அணி | ஸ்கோர் | ஓவர்கள் | இன்னிங்ஸ் | எதிரணி | இடம் | தேதி |
இந்தியா | 46 ரன்கள் | 31.2 | 1 | நியூசிலாந்து | பெங்களூரு | 17 அக்டோபர் 2024 |
இந்தியா | 75 ரன்கள் | 30.5 | 1 | வெஸ்ட் இண்டீஸ் | டெல்லி | 25 நவம்பர் 1987 |
இந்தியா | 76 ரன்கள் | 20 | 1 | தென் ஆப்பிரிக்கா | அகமதாபாத் | 3 ஏப்ரல் 2008 |
இந்தியா | 83 ரன்கள் | 38.5 | 4 | இங்கிலாந்து | சென்னை | 14 ஜனவரி 1977 |
இந்தியா | 83 ரன்கள் | 27 | 1 | நியூசிலாந்து | மொஹாலி | 10 அக்டோபர் 1999 |
இந்தியா | 88 ரன்கள் | 33.3 | 2 | நியூசிலாந்து | பிரபோர்ன் | 12 மார்ச் 1965 |
இந்தியா | 89 ரன்கள் | 54.2 | 2 | நியூசிலாந்து | ஐதராபாத் (டெக்கான்) | 15 அக்டோபர் 1969 |
இந்தியா | 90 ரன்கள் | 30 | 3 | வெஸ்ட் இண்டீஸ் | ஈடன் கார்டன்ஸ் | 10 டிசம்பர் 1983 |
இந்தியா | 100 ரன்கள் | 48.2 | 4 | இங்கிலாந்து | வான்கடே 1 | 8 மார்ச் 2006 |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.