இந்தியா அரைஇறுதிக்குள் நுழையும் சான்ஸ் அதிகம்: ஏன் தெரியுமா?

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் இடம் பெற்று இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் இடம் பெற்று இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Indias semi final chances in T20 World Cup 2024  Tamil News

சூப்பர் 8-ல் மீதமுள்ள 2 போட்டிகளில் இந்திய அணி பலம் குறைவாக இருக்கும் அணிகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

T20 World Cup 2024 | Indian Cricket Team: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  கடந்த 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக கட்டத்தை எட்டிருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடையவிருக்கும் நிலையில், அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், மீதமுள்ள 4 இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எவை? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. 

Advertisment

இந்தியா அரைஇறுதிக்குள் நுழையும் சான்ஸ் அதிகம்

இதுஒருபுறமிக்க, இந்த தொடரில் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் இடம் பெற்று இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நடப்பு தொடரில் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்திய இந்தியா மீதமுள்ள ஒரு போட்டியில் கனடாவுடன் வருகிற சனிக்கிழமை (ஜூன் 15) மோத உள்ளது. இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தொடருக்கான ஏ பிரிவில் இருந்து இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், சி1 இடத்துக்கு தகுதி பெறும் அணியுடன் இந்தியா வருகிற 20 தேதியும், டி2 இடத்துக்கு தகுதி பெறும் அணியுடன் இந்தியா வருகிற 22 ஆம் தேதியும் மோத உள்ளது. 

Advertisment
Advertisements

மேலும், பி- பிரிவில் இருந்து ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தகுதி பெற்று விட்டதால், அந்த அணியுடன் இந்தியா மோதும் போட்டி வருகிற ஜூன் 24 ஆம் தேதி செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. 

ஆனால், சூப்பர் 8-ல் மீதமுள்ள 2 போட்டிகளில் இந்திய அணி பலம் குறைவாக இருக்கும் அணிகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகம். அதாவது, சி1 மற்றும் டி2 இடத்துக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அல்லது நெதர்லாந்து போன்ற அணிகள் தகுதி பெறக் கூடும். அதனால், இந்த 3 போட்டிகளில் இரண்டின் முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக வரும் அதிக வாய்ப்புள்ளது. 

ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீசை இந்தியா எதிர்கொண்டால், இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம். இருப்பினும், ஆப்கானிஸ்தானுடன் மோதவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3-வது போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதும் இருப்பதால், அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம். ஆனாலும், சூப்பர் 8 சுற்றில் நடக்கும் 3 போட்டிகளில் 2ல் இந்தியா வெற்றி பெற்றால் கூட, இந்தியாவுக்கான அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். அதனால், இம்முறை இந்திய அணி அரைஇறுதிக்கு எளிதில் முன்னேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

T20 World Cup 2024 Indian Cricket Team

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: