Advertisment

இந்தோனேசியா ஓபன்: முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா

இந்தோனேசியா ஓபன் போட்டியில் தென் கொரியா கேங் மின் - சியோ ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Satwik-Chirag enter maiden Super 1000 final Indonesia Open

இந்தோனேசியா ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தென் கொரியாவின் காங் மின்-ஹியூக் மற்றும் சியோ சுங்-ஜே ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

Indonesia Open: Satwiksairaj Rankireddy and Chirag Shetty Tamil News இந்தோனேசியா ஓபன் அரையிறுதியில் தென் கொரியாவின் மின் ஹியூக் காங் மற்றும் சியுங் ஜே சியோவை வீழ்த்தி முதல் முறையாக இந்தியாவின் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி சூப்பர் 1000 போட்டியின் இறுதிப் போட்டிக்கு நுழைந்தனர்.

Advertisment

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி - தென் கொரியா கேங், சியோ ஜோடியை எதிர்கொண்டனர்.

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் தென் கொரியா கேங் மின் , சியோ ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி பெற்றனர். இதன் மூலம் சாத்விக்-சிராக் ஜோடி சூப்பர் 1000 போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

publive-image

சாத்விக் - சிராக் ஜோடி மற்றொரு அரையிறுதியில் மோதும் இந்தோனேசியாவின் பிரமுத்யா குசுமவர்தனா மற்றும் யெரேமியா எரிச் யோசே யாக்கோப் ரம்பிடன் மற்றும் இரண்டாவது தரவரிசையில் உள்ள மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் வூய் யிக் சோ ஆகியோருக்கு இடையிலான போட்டியில் வெல்லும் ஜோடியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்வார்கள்.

பிரனாய் தோல்வி

இதனிடையே, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆக்சல்சென் 21-15, 21-15 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Badminton Indonesia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment