India Women vs Bangladesh Women World Cup 2022 Tamil News: பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி, இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - ஷபாலி வர்மா ஜோடி களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் ஷபாலி வர்மா 42 ரன்கள் சேர்த்தும், ஸ்ம்ரிதி மந்தனா 30 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த யாஷிகா பாட்டியா நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். 80 பந்துகளில் 2 பவுண்டரிகளை ஓடவிட்ட அவர் 50 சேர்த்து
ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் 26 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். களத்தில் ஆட்டமிழக்காமால் இருந்த
பூஜா வஸ்த்ரகர் 30 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து 230 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணியில் தொடக்க வீராங்கனைகள் முதல் லோ -ஆடர் வீராங்கனைகள் வரை அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 35 பந்துகளில் 4 பவுண்டரிகளை விரட்டி 32 ரன்கள் சேர்த்த மிடில்-ஆடர் வீராங்கனை சல்மா கதுங்க் ஆறுதல் அளித்தார். மேலும், இந்திய அணியின் தொடர் தாக்குதலை சமாளிக்க முடியமால் திணறிய அந்த அணி 40.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 119 ரன்னில் சுருண்டது.
இதனால், இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த அசத்தலான வெற்றி மூலம் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி வங்கதேசத்துக்கு எதிராக மகளிர் ஒருநாள் போட்டிகளில் தோற்கடிக்கப்படாத சாதனையை தக்கவைத்துள்ளது, மேலும், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணி, உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சினே ராணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி மற்றும் பூஜா வஸ்த்ரகர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
𝐁𝐢𝐠 𝐰𝐢𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐧𝐝𝐢𝐚#TeamIndia bowlers have been fantastic tonight. They have bowled out Bangladesh for 119 to register a convincing 110 runs victory. #CWC22 | #INDvBAN
Details▶️ https://t.co/ZOTtBWYhWG pic.twitter.com/OX52iquPQC— BCCI Women (@BCCIWomen) March 22, 2022
.@YastikaBhatia notched up her second half-century in the #CWC22 & bagged the Player of the Match award as #TeamIndia beat Bangladesh. 👏 👏 #INDvBAN
Scorecard ▶️ https://t.co/ZOTtBWYPMe pic.twitter.com/rjMactEHZd— BCCI Women (@BCCIWomen) March 22, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.