danish kaneria inzamam ul haq,டேனிஷ் கனேரியா ஷோயப் அக்தர் இன்சமாம் உல் ஹக் inzamam ul haq, inzamam ul haq india, shoaib akthar
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் டேனிஷ் கனேரியா கண்ணிய குறைவாக நடத்தப்பட்டார் என்ற ஷோயப் அக்தர் கூறியதை தொடர்ந்து, பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தானியர்களுக்கு இதுபோன்ற சிறிய இதயங்களை கொண்டிருக்க முடியாதென்றும், கிரிக்கெட்டில் மதத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் கூறினார்.
Advertisment
'இன்சமாம் உல் ஹக் - தி மேட்ச் வின்னர்' என்ற தனது யூடியூப் சேனலில், நேற்று வெளியிட்ட ஒரு வீடியோவில், தான் அணியின் கேப்டனகா இருந்த போது, சக்லைன் முஷ்டாக்கிற்கு பதிலாக டேனிஷ் கனேரியா தேர்வு செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். கனேரியா தான் நாட்டின் எதிர்காலம் என்று கருதப்பட்டதையும் விளக்கினார்.
அணியில் விளையாடியபோது சில வீரர்கள் அவரைப் பற்றி நல்ல விதமாக யோசிக்கவில்லை, அவருடன் சாப்பிட விரும்பவில்லை, அவருடன் வெளியே செல்ல விரும்பவில்லை என்று டேனிஷ் தொடர்பான இந்த சர்ச்சையைப் பற்றி நான் கேள்விப்படுகிறேன்.
டேனிஷ் விளையாடிய போட்டிகளில் முக்கால் வாசி எனது தலைமயின் கீழ் என்ற விதத்தில் சொல்கிறேன், மற்ற மதத்தினர் கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டனர் என்பதை நான் உணர்ந்தது கூட இல்லை. எங்கள் அணியில் இதுபோன்ற எந்தவொரு விஷயத்திற்கும் ஒரு உதாரணம் கூட நான் குறிப்பிட விரும்பவில்லை.
அணியில் யூசுப் யுகானா இஸ்லாம் மதம் அல்லாதவர், ஆனால் அல்லாஹ்வின் அருளால், அவர் முகமது யூசுப் ஆனார். யூசுப் யூஹானாவாக இருந்தபோதோ அல்லது மதமாற்றத்திற்குப் பிறகோ அவர் எதையும் புதிதாக உணரவில்லை. முன்பு அவர் அப்படி ஏதாவது உணர்ந்திருந்தால், முதலில் அவர் மதம் மாறியிருப்பார் என்று கூட நான் நினைக்கவில்லை.
நாங்கள் ஒரு சிறிய இதயங்களைக் கொண்டிருக்கிறோம் என்பதை ஏற்க நான் தயாராக இல்லை. பாகிஸ்தானியர்களுக்கு பெரிய இதயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன், அனைவரையும் நம் இதயத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்.
2004 ஆம் ஆண்டில், இந்தியா 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு வந்தது. பாகிஸ்தானியர்கள் திறந்த மனங்களோடு அவர்களை வரவேற்றனர். அவர்கள் சாப்பிட, ஷாப்பிங் செய்ய, டாக்ஸியில் செல்ல எங்கு சென்றாலும், அவர்களிடமிருந்து யாரும் பணம் வாங்கவில்லை.
ஒரு வருடம் கழித்து நாங்கள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். இரு சுற்றுப்பயணங்களிலும் நான் கேப்டனாக இருந்தேன். இந்தியாவிலும் எங்களுக்கு அதே வரவேற்பு கொடுக்கப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்து விருந்தினர்களாக தங்கும்படி எங்களை அழைத்தார்கள். எங்களுக்கு, அவர்கள் உணவை உண்டாக்கினார்கள், ஷாப்பிங்கிற்கு பணம் வாங்கவும் மறுத்தார்கள்.
இரு நாடுகளின் மக்களிடையே இவ்வளவு அன்பு உள்ளது, நம் இதயங்கள் மிகச் சிறியதாக இருக்கக்கூடும் என்று நான் நினைக்கவில்லை. தற்போது வரும் கருத்துகள் சரியானதல்ல என்றும் விளக்கினார்.
நாங்கள் ஒன்றாக சாப்பிட விரும்பவில்லை என்ற கூற்று முற்றிலும் தவறானது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
2005ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்பு, நான் கொல்கத்தாவில் ஒரு படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். சவுரவ் கங்குலி இந்தியத் தரப்பில் இருந்து வந்திருந்தார். அதற்கு சற்று முன்பு, கங்குலியின் உணவகத்தின் சச்சினும், நானும் திறந்து வைத்தோம். சவுரவ் தனது உணவகத்தில் இருந்து எனக்கு உணவை அனுப்புவார், நான் அதை சாப்பிடுவேன்.
நாங்கள் ஷார்ஜா போன்ற சுற்றுப்பயணங்களுக்குச் சென்றபோது, நாங்கள் ஒரே ஹோட்டலில் இருந்தோம், அணிகளின் வீரர்கள் ஒருவருக்கொருவர் அறைகளில் அமர்ந்து, கேலி செய்வதும், ஒன்றாகச் சாப்பிடுவதும் நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
அதிபர் முஷாரஃப் ஒரு முறை என்னை அழைத்து, நீங்கள் நமாஸ் கொடுக்கும் அல்லது தாடியைக் கொண்ட வீரர்களை மட்டும் தான் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நான் கேள்விப்படுகிறேன், நீங்கள் மற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லையா ? என்று கேட்டார். உடனடியாக, நான் சிரிக்க ஆரம்பித்தேன்.
முஷாரஃப் சாஹிப் ஒரு அன்பான நபர், எனது கேள்விக்கு நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? என்று கேட்டார். மதம் அதற்கான இடத்திகுல் இருக்கிறது, கிரிக்கெட்டு அதற்கான தனி இடத்தில் இருக்கின்றது என்று நான் சொன்னேன். அவை ஒன்றும் கலக்கவில்லை, இணைக்கப்படும் என்பதையும் நான் நம்பவில்லை.
நான் இறைவனின் பாதையில் நடக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், ஒருவர் முஸ்லீமா அல்லது முஸ்லிம் அல்லாதவரா என்று பார்க்காமல் நீதி வழங்கவேண்டும் என்று இறைவனின் பாதை நமக்கு சொல்கிறது என்று கூறினேன்.
“(சக்லைன்) முஷ்டாக் சிறுவயதிலிருந்தே என்னுடைய ஒரு நல்ல நண்பர், நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம், ஆனால் நான் கனேரியாவுக்கு முன்னுரிமை அளித்தேன், ஏனெனில் அவர் பாகிஸ்தானின் எதிர்காலம் எண்டேறு நான் நினைத்தேன், முஷ்டாக் எனது தலைமயில் இருக்கும் போது தான் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
"பாகிஸ்தான் என்ற நாட்டு மக்களின் இதயங்கள் மிகப் பெரியவை, அனைவரையும் இதயத்தில் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். எங்கள் இதயங்கள் ஒருபோதும் சிறியதாக இருந்ததில்லை.
"டேனிஷ் கனேரியா விளையாடிய நேரத்தில் நான் கேப்டனாக இருந்ததால் இந்த செய்தியைப் பற்றி நான் வருத்தப்பட்டேன். இந்த செய்தி சரியானது என்று நான் நினைக்கவில்லை, மக்கள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ” என்று கூறினார்.