தமிழகத்தைச் சேர்ந்த 31 வயது முருகன் அஸ்வின் இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். முதல் முறையாக ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட் அணியில் இடம்பெற்றார்.
அதன் பிறகு டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளில் விளையாடினார். அதன் பிறகு 2019ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடினார்.
இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை போலவே முருகன் அஸ்வினும் சுழற்பந்து வீச்சாளர்தான்.
மும்பை அணி இந்த முறை தனது முதல் லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சந்தித்தது. டெல்லி அணி டாஸ் வென்று மும்பையை பேட்டிங்கை செய்ய அழைப்பு விடுத்தது.
மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷனஅ கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, டெல்லி அணி தனது இன்னிங்ஸை விளையாடியது. 18.2 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்து வெற்றி அடைந்தது. லலித் யாதவ், அக்ஸர் படேல், பிருத்வி ஷா ஆகியோர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.
இந்த ஆட்டத்தில் மும்பை தரப்பில் அஸ்வின் முருகன் 4 ஓவர்கள் வீசி மொத்தம் 14 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சுருட்டினார். முன்னணி பந்துவீச்சாளராக பும்ராவுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.
வெற்றியை பறித்த நோபால்… உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்தியா
இந்த ஆட்டத்தில் அஸ்வின் முருகன் கூக்ளி என்றழைக்கப்படும் ஒரு வித சுழற்பந்து வீச்சு முறையைப் பயன்படுத்தி பந்து வீசினார். இதனால் இரண்டு விக்கெட்டுகளை அவர் சுருட்டினார்.
இந்த முறையில் அதிகம் கவனம் செலுத்துமாறு பஞ்சாப் அணியில் இருந்த போது அந்த அணியின் கோச் கும்ப்ளே அறிவுரை வழங்கியிருக்கிறார். இதை முருகன் அஸ்வின் கடந்த ஆண்டு ஒரு விடியோ பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil