வைரல் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஒரே நாள் இரவில் நாடு முழுவதும் பிரபலமான நடிகையாக மாறியவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். மலையாள நடிகையான இவரின், முதல் படம் இன்னும் சில நாட்களில் வெளியாகயுள்ளது. ஆனால். அதற்குள் பிரியா, இளைஞர்கள் மத்தியில் கனவுக் கன்னியாக வலம் வருகிறார். ‘மாணிக்ய மலராய பூவி’ என்னும் பாடல் மூலம் பிரபலமான பிரியாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் பட்டாளம் உருவாக காரணமே அவரின் புருவ அசைவும், ஐஸ் எக்ஸ்பிரஷனும் தான்.
இவரைக் குறித்து வரும் அனைத்து செய்திகளும் வைரல் ரகம் தான். இந்நிலையில், சமீபத்தில் பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஃபோட்டோ ஒன்று இணையதள ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ்களை வாங்கியுள்ளது. கடந்த வெள்ளிகிழமையன்று( 23.2.18) கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஐ.எஸ்.எல் போட்டி நடைப்பெற்றது.
இந்த போட்டியில், கேரளா அணியும், சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியைக் காண பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் வந்திருந்தனர். இந்த போட்டியைக் காண நடிகை பிரியார் வாரியரும், தனது தம்பி மற்றும் ஒரு அடார் லவ் படத்தின் ஹீரோ ரோஷன் ரஹூஃப் உடன் சென்றுள்ளார். அப்போது, இவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அமர்ந்துள்ளனர்,
https://twitter.com/priyapvarrier77/status/967061181038055424
அவர்களை கண்டு, உற்சாகம் அடைந்த பிரியா மற்றும் ரோஷன் உடனடியாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் தங்களுக்கு அருகில் அமிதாப் மற்றும் சச்சின் ஆகியோர் இருப்பதாகவும், அவர்களிடம் பேச ஆவலாக உள்ளதாகவும் கூறியிருந்தனர். இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திற்குள், பிரியா வாரியர் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டார்.
https://twitter.com/priyapvarrier77/status/967095900978884609
அதில், கேரள அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை பிரியா மற்றும் ரோஷன் ஆகியோர் சச்சினிடம் கொடுப்பது போன்று போஸ்ட் கொடுத்திருந்தனர். இந்த புகைப்படம் சில நிமிடங்களிலே இணையத்தில் வைரலாகியது. மேலும், கேரள அணிக்கு சப்போர்ட் செய்யும் வகையில், பிரியா மஞ்சள் நிற ஆடையை அணிந்து சென்றிருந்தார். இந்த ட்ரெஸ்ஸில் பிரியா மிகவும் அழகாக இருப்பதாக வழக்கம் போல் அவரின் ஃபேன்ஸ்கள் கமண்ட் செய்ய துவங்கியுள்ளனர்.
Priya Prakash Varrier and Roshan Abdul Rahoof are in attendance for #KERCHE!#LetsFootball #HeroISL pic.twitter.com/4sggWKUtd1
— Indian Super League (@IndSuperLeague) February 23, 2018