Virat Kholi | Jasprit Bumrah | Ipl Cricket: பல்வேறு காரணங்களுக்காக, ஜஸ்பிரித் பும்ரா கதையின் முக்கிய பகுதியாக விராட் கோலி இருக்கிறார். அவர் மிகவும் விரும்பும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் 5 ஜனவரி 2018 அன்று தென் ஆப்பிரிக்காவில் கோலியின் தலைமையின் கீழ் பும்ரா அறிமுகமானார். மேலும் கோலியின் ஆக்ரோஷமான மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட கேப்டன்சியின் கீழ் அவர் செழித்து வளர்ந்தார். இன்று இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் என்கிற அந்தஸ்துக்கு அவர் உயர்ந்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்பே, பும்ரா ஐ.பி.எல் 2013ல் கோலியை ஆட்டமிழக்கச் செய்தபோது, உயர்தர கிரிக்கெட்டில் தனது முதல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். உண்மையில், பும்ரா கோலியை ஐந்து முறை அவுட் செய்து வெளியேற்றியுள்ளார். அப்படியென்றால், கோலியை பும்ரா தான் ஆதிக்கம் செலுத்தினார் என்றால், அது அப்படியில்லை. கோலியும் பும்ராவுக்கு எதிராக தனது தருணங்களைக் கொண்டிருந்தார். ஐ.பி.எல்-லில் இருவரும் மோதிய 16 ஆட்டங்களில், கோலி 95 பந்துகளில் 147.36 ஸ்ட்ரைக் ரேட்டில் 140 ரன்கள் எடுத்துள்ளார். அந்த 95 பந்துகளில், அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2013 to IPL 2024: Five times when Jasprit Bumrah dismissed Virat Kohli in the IPL
ஆனால், கடந்த வியாழன் அன்று வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை - பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில், பும்ரா காட்டியது போல், அவர் கோலியை கொஞ்சம் கொஞ்சமாக தொந்தரவு செய்தார். பெரும்பாலும் லெங்த் பந்தில் அவருக்கு அதிக குடைச்சல் கொடுத்து இன்சைடு எட்ஜ் மூலம் ஆட்டமிழக்க செய்தார்.
இந்நிலையில், ஐ.பி.எல்-லில் கோலி - பும்ரா இடையே அரங்கேறிய போட்டி குறித்தும், அதில் யார் தற்போது முன்னிலை உள்ளார் என்பது பற்றியும் இங்குப் பார்க்கலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ், 2013 (பெங்களூரு): கோலி 24 ரன்கள் (13 பந்துகள்) எல்.பி.டபிள்யூ அவுட் - பும்ரா (பவுலிங்)
2013 ஐ.பி.எல் தொடரில் பும்ரா அறிமுகமான நிலையில், இரண்டு நவீன கால கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களுக்கு இடையிலான முதல் சந்திப்பு அப்போது தான் நிகழ்ந்தது. இந்த சந்திப்பின் போது கோலி தொடக்கத்தில் முன்னிலை வகித்தார். பும்ராவின் முதல் பந்து, இரண்டாவது மற்றும் நான்காவது பந்து பவுண்டரிக்கு சென்றது. அப்போது போட்டியின் நடுப்பகுதியில் எடுக்கப்பட்ட நேர்காணலில், ஒரு வரியில் தோள்களைக் குலுக்கியபடி பும்ரா, "முதல் போட்டி, சற்று பதற்றம், அது நடக்கும்!" என்றார். அதன்பிறகு அவர் ஒரு லெங்த் பந்தை வீச, அது மீண்டும் உள்ளே வந்து கோலியின் பேட்களில் தள்ளப்பட்டது. கள நடுவர் அவுட் கொடுக்கவே பும்ரா, அவரது நிதானமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். சுழலும் கரங்களுடன் மகிழ்ச்சியில் கர்ஜித்தார். இப்போது அது அவரின் டிரேடு மார்க்காக மாறிவிட்டன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ், 2019 (பெங்களூரு): கோலி 46 (32) கேட்ச் - ஹர்திக், பவுலிங் - பும்ரா
பும்ரா மீண்டும் கோலியின் விக்கெட்டை எடுக்க 6 ஆண்டுகள் எடுத்தது. அதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது. ரன் வேட்டையில் ஆர்.சி.பி-யை வழிநடத்திக்கொண்டிருந்த கோலிக்கு மோசமான பவுன்சரை வீசினார் பும்ரா. பந்து கோலிக்கு தோள்பட்டை உயரத்தில் இருந்தது. அதை துரத்த முயன்று கோலி ஹர்திக் பாண்டியாவிடம் புல்-எட்ஜிங் செய்து கேட்ச் கொடுத்தார். லசித் மலிங்காவுக்கு எதிரான நோ-பால் அழைப்பிற்காக பும்ரா போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ், 2020 (அபுதாபி): கோலி 9 (14) கேட்ச் - திவாரி, பவுலிங் பும்ரா
பும்ராவின் 100-வது ஐ.பி.எல் விக்கெட்டும், அவர் முதல் வீழ்த்திய விக்கெட்டும் கோலி தான். மற்றொரு பவுன்சர் கோலியை நோக்கி திரும்பியது. அது அவரது தோள்பட்டை உயரத்திற்கு செல்லவில்லை, ஆனால் அவசரமாக ஆட முயன்ற கோலி முந்தைய ஆண்டு பெங்களூரில் செய்தது போல, பந்தை விரட்ட முயன்று மிட்விக்கெட்டில் சவுரப் திவாரி வசம் டாப் - எட்ஜிங் செய்து கேட்ச் கொடுத்தார். அந்த போட்டியில் 4 ஓவர்களில் பும்ரா 14 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2021 (சென்னை): கோலி 33 (29) எல்.பி.டபிள்யூ, பவுலிங் - பும்ரா
முதல் ஆட்டமிழப்பைப் போலவே, இந்த முறை சேப்பாக்கத்தில் கோலி லெந்த் பந்தில் சிக்கி வெளியேறினார். அதேபோலவே பந்து மீண்டும் உள்ளே நுழைந்தது, கோலி தனது ப்ரெட்-அண்ட்-பட்டர் ஷாட்களில் ஒன்றான ஸ்கொயர் லெக்கின் பின்னால் டக் செய்வதை தவறவிட்டார். அவர் பந்தை அக்ராஸ் ஆட முயன்ற நிலையில், பந்து சட்டென உள்ளே நுழைந்தது. நடுவரின் அவுட்-டிற்கு எதிராக கோலி அப்பீல் கூட செய்யாமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2024 (மும்பை): கோலி 3 (9) கேட்ச் - இஷான் கிஷன், பவுலிங் - பும்ரா
இருவரின் மிக சமீபத்திய சந்திப்பு முற்றிலும் பும்ராவுக்கு சொந்தமானது. ஐ.பி.எல் தொடரில் 8வது சதத்தை எட்டிய கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வான்கடேவில், அவர் மீண்டும் பெங்களூரு அணிக்காக தொடக்க வீரராக பேட்டிங் ஆட வந்தார். ஆனால் பும்ரா தனது 3வது பந்தில் கோலியை தட்டித் தூக்கினார்.
முந்தைய பந்து வீச்சில், அந்த 2013 தருணத்தை நினைவூட்டும் ஒரு ஆட்டத்தில் கோலி பேட்டுகளில் தாக்கப்பட்டார். ஆனால் இந்த முறை பந்து கீழே ஸ்லைடு ஆனது. பும்ரா அடுத்த பந்தை இன்னும் குறைத்தார். மேலும் அவர் உருவாக்கிய கோணம் கோலியை செயலிழக்கச் செய்தது. அது ஒரு பவுன்சர் அல்ல, ஆனால் பந்து கோலியின் பேட்டின் கீழ் விளிம்பில் முத்தமிட்டது. அந்த இரவில் பும்ரா கோலியை 5வது முறை ஆட்டமிழக்க செய்து, மொத்தமாக 5 விக்கெட்டை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.