நேற்றைய தினம்ம் அனுஷ்கா சர்மா தனது 30 ஆவது பிறந்தநாளை கிரிக்கெட் மைதானத்தில் கொண்டாடினார். என்னது மைதானத்திலையா என்று அதிர்ச்சி ஆக வேண்டாம். விராட் கோலியே அவரின் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு கிரிக்கெட் மைதானத்தில் தான் பிறந்தநாள் பரிசையே தந்தார்.
ஐபிஎல் 2018, 31 ஆவது லீக் ஆட்டத்தில், பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்- மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில், கேப்டன் விராட் கோலி அணியான பெங்களூர் அணி அதிரடியாக ஆடி வெற்றிப்பெற்றது.
இந்த ஆட்டத்தின் முடிவில் பேசிய விராட் கோலி, இந்த வெற்றியை தனது மனைவி அனுஷ்காவிற்கு சமர்ப்பித்தாக தெரிவித்தார். அப்போது அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் பலத்த சத்தத்துடன் கத்தினார். உடனே, பெரிய ஸ்கீரினில் அனுஷ்கா சர்மாவிற்கு ஜூம் வைக்கப்பட்டது. அனுஷ்கா உடனே வெட்கத்தில் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
விராட் பேசியாதவது, “ என் மனைவிக்கு இன்று பிறந்தநாள். அவரும் இங்கு வந்துள்ளார். இந்த வெற்றி அவரின் பிறந்தநாளுக்கு ஒரு சிறிய பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார். இதுக் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அனுஷ்கா சர்மா, “ உலகத்திலியே சிறப்பான , அன்பான, தைரியமான மனிதருடன் கொண்டாடிய சிறந்த பிறந்த நாள் இது” என்று தெரிவித்துள்ளார்.
Happiness Can Neither Be Created Nor Destroyed. It Can Only Be Transferred From One Sharma To Another.
Sir Jadeja's Law Of #IPL. ????????????#RCBvMI #RCBvsMI #MumbaiIndians pic.twitter.com/T0lId5yPea
— Sir Jadeja fan (@SirJadeja) May 1, 2018
https://twitter.com/Aarushiiiiiiiii/status/991387621262839808
https://twitter.com/Aarushiiiiiiiii/status/991386414767116289
https://twitter.com/Aarushiiiiiiiii/status/991383594915463168