ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், நாளை (21.5.18) முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் துவங்குகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 ஆவது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் கலந்துக் கொண்ட நிலையில் ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் நான்கு இடத்தை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தேர்வு ஆகியுள்ளனர்.
நேற்று இரவு சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்துடன் லீக் சுற்று முடிவுக்கு வந்தது. புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைப்பெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
அடுத்ததாக களத்தில் இறங்கிய சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளையும் ஒரு முறையாவது வீழ்த்திய ஒரே அணி என்ற சாதனையும் சென்னை அணிக்கு கிடைத்துள்ளது.
14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தேர்வாகியது. இன்று ஓய்வு நாள் முடிந்ததும் நாளை பிளே ஆப் சுற்றுக்கள் தொடங்குகின்றன.
மும்பையில் நாளை இரவு நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
அதே போல் வரும் மே 23 ஆம் தேதி, மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் 2ஆவது தகுதிச் சுற்றிற்காக 25 ஆம் தேதி மோதும்.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/flag-50-300x169.jpg)
இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணி தான் இறுதி போட்டிக்கு சென்ற அணியுடன் நேரடியாக மோதும். ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ள இந்த இறுதிப் போட்டி வரும் வரும் 27 ஆம் தேதி மும்பையில் நடைபெறுகின்றன.