/tamil-ie/media/media_files/uploads/2018/04/kkr-vs-rr-edited.jpg)
IPL 2018, Jaipur, Kolkata Knight Riders, Rajasthan Royals
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று (ஏப்ரல் 18) கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடக்கிறது.
ஐபிஎல் 2018, புள்ளிகள் அட்டவணையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் சம அளவில் இருக்கின்றன. ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா முன்னிலையில் இருக்கிறது. இரு அணிகளில் எந்த அணி புள்ளிகளில் முந்துவது? என்பதை நிர்ணயிக்கும் போட்டி இது!
கொல்கத்தா நைட் ரைடர்ஸில் ஆந்த்ரே ரஸ்ஸெல் அதிரடி சூரர் என்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் பட்டையை கிளப்பி வந்திருக்கிறார். ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணிக்கும், தமிழகத்தை சேர்ந்தவரான தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணிக்கும் இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் கார்ட் இங்கு காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.