சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card

சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card

ஜெய்ப்பூரில் இன்று இரவு எட்டு மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

தோனி தலைமையிலான சென்னை அணி, பேட்டிங்கில் கில்லியாக விளங்கினாலும், பந்துவீச்சு என்பது மிகவும் கவலைக் கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது. டெத் ஓவர்களில் சிறந்த பவுலரை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது சிஎஸ்கே. அதேசமயம், லுங்கி ங்கிடியின் பந்துவீச்சு பிளே ஆஃப்களில் நிச்சயம் கை கொடுக்கும் என தோன்றுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் ஒரு வெற்றி தேவை என்பதால், இப்போட்டியில் வென்று, தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது சிஎஸ்கே.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை, பத்து போட்டிகளில் ஆடி, நான்கில் மட்டும் வென்றுள்ளது. இன்றைய போட்டியை சேர்த்து, மீதமிருக்கும் நான்கு போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில், டாஸ் வென்ற கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இப்போட்டியின் Live Cricket Score Card-ஐ உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

×Close
×Close