/tamil-ie/media/media_files/uploads/2018/05/s46.jpg)
இந்தூரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள பஞ்சாப் அணி, 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல் மற்றும் கிரிஸ் கெயில் முக்கிய துருப்புச் சீட்டுகள். இவர்கள் இருவரில் ஒருவர் நிலைத்து நின்றுவிட்டாலே, ஸ்கோர் எகிறிவிடும். மற்றபடி, மாயன்க் அகர்வால், மனோஜ் திவாரி, கருண் நாயர், டேவிட் மில்லர் ஆகியோர் இருக்கின்றனர். ஆனால், இவர்களின் ஃபார்ம் கன்சிஸ்டன்ட்டாக இல்லை. குறிப்பாக, டேவிட் மில்லர் இதுவரை, தனது பழைய அதிரடி பாணியிலான ஆட்டத்தை கையிலெடுக்கவில்லை. இந்த சீசனில் இரண்டு போட்டியில் மட்டும் ஆடியிருக்கிறார். மொத்தமாக 50 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஸ்டிரைக் ரேட் என்னவோ 119.04 தான். பவுலிங்கில் அஷ்வின், மொஹித் ஷர்மா, முஜீப் உர் ரஹ்மான் பலம் சேர்க்கின்றனர்.
அதேசமயம், 8 போட்டிகளில் ஆடி, 6 தோல்விகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ். கடந்த சீசனில் மும்பை கோப்பை வெல்ல உதவிய ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா ஆகிய மூவரும் அவுட் ஆஃப் ஃபார்மில் இருப்பதால், கடைசி இடத்தில் உள்ளது மும்பை. பொல்லார்ட் அடுத்த சீசனில் மும்பை அணியில் இருக்க மாட்டார் என நன்றாகவே தெரிகிறது. இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள பொல்லார்ட் 76 ரன்களே எடுத்துள்ளார். இதுவும் மும்பைக்கு மிகப்பெரிய சறுக்கல் தான்.
இந்த நிலையில், இவ்விரு அணிகளும் இன்று இரவு எட்டு மணிக்கு மோதும் போட்டியின் Live Score Card ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.