கோலிக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் திணறிய சஹால்!

இந்த முறை கண்டிப்பாக ராயம் சாலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட இருக்கும்  விராட் கோலி, சஹால், பிரண்டன் மெக்கலம் ஆகியோர்  வார்ம் அப் என்ற பெயரில் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

11வது ஐபிஎல் தொடர்,  வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்திய கேப்டன் விராட் கோலி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த சீசனில் விளையாடுகிறார்.  ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணியில் நீண்ட காலம் விளையாடும் ஒரே வீரரும் விராட் கோலி ஆவார்.

ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் பலவீனமாக பார்க்கப்படுவது பந்து வீச்சு தான். ஆனால், இம்முறை அதை சரிக்கட்டும் விதமாக, இந்த அணியில், வாஷிங்டன் சுந்தர், ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கி வரும் சஹால் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்த முறை கண்டிப்பாக ராயம் சாலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கான பயிற்சியில் வீரர்கள் மும்முரமாக இருப்பார்கள்  என்று நினைத்தால்,  சஹால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று,  அனைவரையும் “அட நம்ம கோலியா இது இவ்வளவு கூலா இருக்கிறாரே” என்று கேட்க வைத்துள்ளது.

சில தினங்களுக்கும் முன்பு, ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில்  விராட் கோலி  வெறித்தனமாக ஈடுப்பட்டு வருவதாக  செய்திகள் வெளியாகின.  இந்நிலையில்,  சஹால் வெளியிட்டுள்ள வீடியோவில்,  கோலி, பிரண்டன் மெக்கலம் , சஹால் ஆகியோர் இந்தி பட பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடுகின்றனர்.

ஸ்டெப்பை மறக்காத விராட், அசால்ட்டாக டான்ஸ் ஆடுகிறார். ஆனால், கோலியுடன் போட்டிபோட முடியாத சஹால் சிரித்துக் கொண்ட நடனத்தை பாதிலியே விட்டு, சிரிப்பை அடக்க முடியாமல்  விழுந்து விழுந்து சிரிக்கிறார்.  இந்த வீடியோவை பார்க்கும் போது, கண்டிப்பாக அது, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிக்கான விளம்பர நிகழ்ச்சி என்று.

ஆனால், சஹால் இதை  அதிரடி வீரர்களான கோலி மற்றும் , பிரண்டன் மெக்கலம்  உடன் ஒரு சின்ன ‘வார்ம் அப்’ என்று கலாய்க்கும் படி பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

×Close
×Close