வந்துட்டேன்னு சொல்லு... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு... கெத்தாக கலக்கிய சிஎஸ்கே

IPL 2018 Winner : இரண்டாண்டு தடைக்குப் பின் விளையாட வந்த சென்னை அணி, ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2018 இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இரண்டாண்டு தடைக்கு பின்னர் விளையாட வந்த சென்னை அணி, வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துவிட்டதாக அறிவித்து உள்ளது.

IPL 2018 Winner - csk-2

வெற்றியை கொண்டாட ஓடி வரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்கள்

மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி மும்பையை வென்று அசத்தியது. அந்த போட்டியில் சென்னை அணி வீரர் ப்ரேவோ அபாரமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். அதன் பின்னர் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் திறமையை காண்பித்து, இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றனர்.

IPL 2018 Winner - csk-ipl-2018

மைதானத்தில் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிய வாழ்த்துச் சொன்ன சென்னை வீரர்கள்.

மும்பையில் நடந்த இறுதி போட்டியில், ஐதராபாத் அணியை எதிர் கொண்டது, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. லீக் போட்டியில் 2 ஆட்டங்களிலும், ப்ளே ஆப் போட்டியிலும் ஐதராபாத் அணியை சிஎஸ்கே வென்றது. அதே பாணியில் இறுதி போட்டியிலும் ஜெயித்து கப்பை வென்றது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன், முதல் பத்து பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் தடுமாறினார். அதன் பின்னர் அவர் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். 105 ரன்கள் அடித்து இறுதி வரையில் ஆட்டம் இழக்காமல், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு ரெய்னா நல்ல கம்பெனி கொடுத்தார்.

IPL 2018 Winner - csk-ipl-2018

கொண்டாட்டத்தில் ரெய்னா.

ப்ளே ஆப் போட்டியில் வெற்றி தேடித்தந்த டுப்ளிஸிஸ் சொற்ப ரன்னில் அவுட்டானாலும் வாட்சன் தனிய்யாளாக நின்று அணியை ஜெயிக்க வைத்தார். முதியவர்கள் அணி என சிஎஸ்கே அணியை விமர்சனம் செய்தவர்கள் வியக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்ததை கேப்டன் டோனி உள்பட அணி வீரர்கள் கொண்டாடினார்கள். போட்டி முடிந்ததும் டோனி தனது மகளுடன் மைதானத்துக்குள் வந்து மகிழ்ச்சியை கொண்டாடினார்.

×Close
×Close