/tamil-ie/media/media_files/uploads/2019/03/a863.jpg)
IPL 2019 Chennai super kings dhoni kedar jadhav - IPL 2019: இது சென்னை சூப்பர் கிங்ஸ்! சேட்டையைத் துவக்கிய தோனி & கோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரதாரர்களின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இதில், தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் வரும் மார்ச் 23ம் தேதி துவங்குகிறது. தொடக்கப் போட்டியே ரசிகர்களின் பிபி-யை எகிற வைக்கப் போகும் போட்டி என்றால் மிகையல்ல.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
ஆம்! தோனி vs கோலி!
'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்பது போல், இந்தத் துவக்கப் போட்டியுடன் ஐபிஎல் 2019 சீசனை வரவேற்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.
குறிப்பாக சென்னை ரசிகர்கள். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. நேற்று(மார்ச்.15) காலை 11 மணிக்கெல்லாம் ரசிகர் ஒருவர் டிக்கெட் வாங்க ஸ்டேடியத்திற்கு வந்துவிட்டார். (வெறிகொண்ட வேங்கையனா இருப்பார் போல...)
அதிகாலை முதலே டிக்கெட் கவுண்ட்டரை மையம் கொண்ட ரசிகர்கள் பலருக்கும், டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சில ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. (இருக்காத பின்ன... மோதுறது தோனியும், கோலியும்-ல)
இந்த களேபரங்களுக்கு மத்தியில், சிஎஸ்கே அணியின் விளம்பரம் ஒன்று ஷூட் செய்யப்பட்டது. இதில், சிஎஸ்கே வீரர்கள் முரளி விஜய், தமிழகர்களுக்கே தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஹர்பஹன் சிங், தல தோனியின் செல்லப் பிள்ளைகளில் ஒருவரான கேதர் ஜாதவ் ஆகியோர் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர்.
யாரை தேடுறீங்க? தோனியைத் தானே! தல இல்லாம சிஎஸ்கே விளம்பரமா?
This song and the Men in Yellow, the best #Yellove story ever! #WhistlePodu ???????? @Frooti@msdhoni@harbhajan_singh@mvj888@JadhavKedarpic.twitter.com/mDZj4a2nxE
— Chennai Super Kings (@ChennaiIPL) 16 March 2019
யப்பா.. புதுசா ஒரு டியூனை போட்டு, இந்த பாட்ட மாத்துங்கப்பா...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.