IPL 2019 Chinnaswamy Stadium : பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டியை பார்த்து ரசிக்க இனி நீங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கும் அனுமதி உண்டு.
ஐபிஎல் திருவிழா இந்தியாவில் களைக்கட்ட தொடங்கி விட்டது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஐபிஎல் போட்டிகளை கண்டுக்களித்து வருகின்றன. தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் எந்த அணியில் இடம் பெற்று இருக்கிறார்களோ அந்த அணியை சப்போர்ட் செய்து அந்த அணியை சியர்ப் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் போட்டி எந்த மைதானத்தில் நடந்தாலும் அங்கு அந்த அணியின் வண்ணத்தில் உடைகளை அணிந்துக் கொண்டு ஸ்டேடியத்தில் ஆர்பரிப்பதாலே ஐபிஎல் போட்டிகள் திருவிழா போல் கட்சி அளிக்கின்றன.
இப்படி ஐபிஎல் போட்டிகள் மேல் பைத்தியமாக சுற்றும் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ், உங்கள் வீட்டில் நீங்கள் நாய், பூனை, கிளி, முயல் என செல்ல பிராணிகளை ஆசையுடன் வளர்க்கிறீர்களா? ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்களில் அந்த பிராணிகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு வர்றீங்களா?
இனிமே அப்படி விடாதீங்க. ஸ்டேடியத்திற்கே கூட்டிட்டு வந்து உங்க பக்கதுல வச்சீக்கோங்க. உங்க செல்ல பிராணிகளுடன் சேர்ந்து போட்டியை அதே சந்தோஷத்துடன் ரசியுங்கள்.
ஆம், பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி ஸ்டேடியத்தில் செல்ல பிராணிகளுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டிட்யை காணும் வசதி வந்து விட்டது. இதற்கான பிரத்யேக இருக்கைகளும் செய்யப்பட்டுள்ளனர். நீங்கள் அமர தனியாக வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வசதி ரசிகர்களுக்கு பெங்களூர் அணி மோதும் பந்தையங்களின்போது மட்டுமே.
ராஜஸ்தான் அணியின் போட்டியின் போது ஸ்டேடியத்திற்கு வரும் ரசிகர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். ரசிகரளுக்காக ராஜஸ்தான் அணி சார்ப்பில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனிமே என்ன ஜாலி தான்.. உங்க செல்ல பிராணிகள் பூனை, நாயாக இருந்தால் பிரச்சனை இல்லை. அதுவே பாம்பு, முதலை போன்ற விலங்குகளாக இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.