Advertisment

IPL 2019: மார்ச் 16ல் தொடங்கும் டிக்கெட் விற்பனை! சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!

IPL 2019 Ticket Sale: மார்ச் 16 அன்று மட்டும் காலை 11.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ipl 2019 csk match ticket sale csk vs rcb - IPL 2019: மார்ச் 16ல் தொடங்கும் டிக்கெட் விற்பனை! சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!

ipl 2019 csk match ticket sale csk vs rcb - IPL 2019: மார்ச் 16ல் தொடங்கும் டிக்கெட் விற்பனை! சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!

IPL 2019 CSK vs RCB Ticket Sale: சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல்., தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 16ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் இந்த முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஏப்ரல் 5ம் தேதி வரையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு தினத்தில் ஐபிஎல்., தொடருக்கான முழு அட்டவணையை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி, சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் இரண்டு போட்டிகள் நடக்கவுள்ளது.

ஐபிஎல் டிக்கெட் விற்பனை

ஆன்லைன் மற்றும் கவுண்டர்களில் சென்று வாங்க வேண்டிய டிக்கெட்டுகள், வெவ்வேறு சீட்களுக்கு தகுந்த ரேட்டுகள் என டிக்கெட் விற்பனை ரூ.1300 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகள் வரும் மார்ச் 16-ஆம் தேதியில் இருந்து விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள டிஎன்சிஏ பாக்ஸ் ஆபீஸில் விற்கப்படவுள்ளன.

கவுண்டர்களைப் பொறுத்தவரை, ஒரு தனி நபருக்கு 2 டிக்கெட்டுகளுக்கு மேல் தரப்படமாட்டாது என்றும், டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் முதல் நாளான மார்ச் 16-ஆம் தேதி அன்று மட்டும் காலை 11.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை (இடையில் 12.30 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை) டிக்கெட்டுகள் கொடுக்கப்படவுள்ளன என்றும், அடுத்தடுத்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (இடையில் 12.30 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை) டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே டிக்கெட்டுகளை புக் மை ஷோ (bookmyshow) இணையதளத்திலும் சென்று புக் செய்துகொள்ளலாம். சென்னை சூப்பர் கிங்ஸின் ஹோம் மேட்சஸ் எனப்படும் தொடக்க ஆட்டங்களை கண்டுகளிப்பதற்கான டிக்கெட் விற்பனை விபரங்களை மட்டுமே தற்போது அறிவித்துள்ளனர். இதர விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Chennai Super Kings Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment