Advertisment

CSK vs DC 2019: திமிராக விளையாடினால் சிஎஸ்கே-வை வீழ்த்தலாம்... ஆனால், காயம்பட்ட சிங்கத்தை அடக்க அது போதாது!

When and Where to Watch CSK vs DC Live on TV: சென்னை vs டெல்லி லைவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2019 CSK vs DC Live Streaming on TV

IPL 2019 CSK vs DC Live Streaming on TV

IPL 2019 CSK vs DC Live Streaming on TV: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.1) இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

Advertisment

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் தோனி. பலவீனம் தோனி இல்லாத அணி. ஆம்! அவர் தான் சிஎஸ்கே-வின் ஆகப்பெரும் பலமாக இருக்கிறார். கடந்த காலங்களில் சென்னை கப் வென்ற போதும் சரி, வெல்லாத போதும் சரி, சூப்பர் கிங்ஸில் பெரும்பாலான வீரர்கள் மேட்ச் வின்னர்களாக இருந்தனர்.

ஆனால், இந்த சீசனில் தோனியை தவிர, இதர வீரர்கள் யாரும் மேட்ச் வின்னர்களாக இருப்பதில்லை. இது சிஎஸ்கே-வுக்கே புதிது. இந்த நிலைமையில் கோப்பையை வெல்ல முடியுமே என்பது கேள்விக்குறியே!

கோப்பை வெல்வது இருக்கட்டும், இன்றைய டெல்லிக்கு எதிரான மேட்சில் சிஎஸ்கே என்ன செய்யப் போகிறது?

தோனி நேற்று முழுவதும் பயிற்சியில் ஈடுபடவில்லை. இன்றும் ஈடுபட்டதாக தெரியவில்லை. ஸோ, காய்ச்சலில் இருந்து தல முழுமையாக குணமடையவில்லை என்றே தெரிகிறது. எனினும், போட்டி தொடங்குவதற்கு முன்பே, அவரது இருப்பு உறுதி செய்யப்படும்.

நம்பிக்கையோடு காத்திருப்போம்!

அதேசமயம், கங்குலியின் ஆலோசனை, ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி என்று டெல்லி கேபிடல்ஸ் அசத்தி வருகிறது. தொடக்கத்தில் சற்று சொதப்பினாலும் தவான் ஃபார்முக்கு வந்த பிறகு டெல்லி அணியின் வெற்றி ரேட் உயரத் தொடங்கியது. எந்த அணியாக இருந்தாலும் இளமை + அனுபவ திமிருடன் எதிர்த்து பந்தாடுகின்றனர்.

இன்று சிஎஸ்கே அந்த திமிரில் சிக்கப் போகிறதா? அல்லது சிங்கத்தின் கர்ஜனையில் தலைநகர் தெறிக்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

CSK vs DC Match: When and Where to Watch?

சென்னை vs டெல்லி போட்டியை அனைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் கண்டுகளிக்கலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டார் ப்ரீமியம் மூலமாக இப்போட்டியை காணலாம்.

தவிர, தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் பிரத்யேக லைவ் அப்டேட்ஸ் மற்றும் லைவ் ஸ்கோர் கார்டினை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment