IPL 2019 CSK vs KXIP: ஐபிஎல் 2019 தொடரில், இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
மேலும் படிக்க - மும்பை vs ஹைதராபாத் லைவ் கிரிக்கெட் அப்டேட்ஸ்
Live Blog
Live IPL 2019: CSK vs KXIP Playing 11 Live Score Updates
19வது ஓவர் முதல் பந்தை நோ பால் வீசிய சாஹர், அடுத்த பந்தையும் நோ பால் வீச, இரண்டு நோபாலுக்கு 2 ரன், முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த பந்தில் 2 ரன் என மொத்தமாக ஒரே பந்தில் 8 ரன்கள் அடிக்கப்பட, சாஹரை அருகில் வந்து தோனி மிகக் கடுமையாக திட்டியதை நாம் பார்க்க முடிந்தது.
சர்ஃபரஸ் கான் அடியில் கூட நிறைய மாற்றம் இருக்கு. குறிப்பாக, கடந்த போட்டியில் இருந்து, அவரது நம்பிக்கையும் பெருமளவில் அதிகரித்திருப்பது போன்றே தெரிகிறது. ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனது கன்னி ஓவரை இன்று வீசிய ஸ்காட் குக்கலேஜினின் முதல் பந்தை சிக்ஸருக்கு தூக்கியதில் இருந்தே நான் சொன்னதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
இந்தப் போட்டியில் சென்னை ஜெயிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கு.. ஸ்பின் பவுலிங் தான் சிஎஸ்கே-வின் பலம். சேப்பாக் ஸ்டேடியத்தில், செகண்ட் பேட்டிங்கில் இன்று ஸ்பின் எடுக்கிறது. தொடர்ந்து ஜடேஜா, தாஹிர் போன்ற ஆயுதங்களை தோனி பயன்படுத்தி, கடும் நெருக்கடி கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.
20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 23 பந்துகளில் 37 ரன்களும், அம்பதி ராயுடு 15 பந்துகளில் 21 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனர்.
ராயுடு இன்னும் ஒரு 15 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம்..
முதலுக்கே மோசம்....
கண்ணாயிரம் - வாட்சன், டு பிளசிஸ், ரெய்னா என சென்னை அணியின் மிக முக்கிய மூன்று விக்கெட்டுகளும் அவுட்.. ராயுடுவின் நிலையற்ற பேட்டிங், தோனியின் கடைசி நேர அதிரடி என இவற்றை கணக்கிட்டுப் பார்த்தால், சென்னை 155 - 175 அடிக்க வாய்ப்புள்ளது.
என்னண்ணே 20 ரன்களை குறைச்சுட்டீங்க...?
ஆமாப்பா... அவ்ளோ தான் இனி சிஎஸ்கே-வால் அடிக்க முடியும்.
சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தின் பிட்ச் இன்று பேட்டிங்கிற்கு முழுமையாக சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வெங்காயம் எங்களுக்கு தெரியும்... பிட்ச் தோனிக்கு சப்போர்ட் பண்ணுமா, அஷ்வினுக்கு சப்போர்ட் பண்ணுமா-னு சொல்லு-ங்றீங்களா?
உங்க கணிப்பு கண்ணாயிரமே அதைச் சொல்லுவாரு...
கண்ணாயிரம் - இந்த சீசனில் இன்று முதன் முதலாக பேட்டிங்குக்கு சேப்பாக் பிட்ச் ஆதரவாக உள்ளது. சென்னையில் கொளுத்தும் வெயிலில், ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights