லோகேஷ் ராகுல் அதிரடியில் பஞ்சாப் ஆறுதல் வெற்றி!

IPL CSK vs KXIP: பஞ்சாப் வெற்றி

CSK vs KXIP Live Score, CSK vs KXIP Playing 11 Live Score
CSK vs KXIP Live Score, CSK vs KXIP Playing 11 Live Score

IPL 2019 CSK vs KXIP: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.5) மாலை 4 மணிக்கு மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

Live Blog

IPL 2019: CSK vs KXIP


19:34 (IST)05 May 2019

மும்பை பௌலிங்

டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங்கை தேர்வு செய்தது

19:26 (IST)05 May 2019

பஞ்சாப் அணி வெற்றி

6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது பஞ்சாப். ஆறுதல் வெற்றியுடன் பஞ்சாப் தொடரை நிறைவு செய்ய, சிஎஸ்கே தோல்வியுடன் முடித்திருக்கிறது.

19:24 (IST)05 May 2019

பூரன் அவுட்

jadega பந்தில் பூரன் விக்கெட், டோனி கேட்ச் செய்தார்

19:18 (IST)05 May 2019

163 / 3

பதினாறு ஓவர் முடிவில்

19:12 (IST)05 May 2019

151/3

15 ஓவர் முடிவில் 

19:00 (IST)05 May 2019

மாயங் அகர்வால் அவுட்

ஹர்பஜனுக்கு மற்றொரு விக்கெட்… 

மாயங் அகர்வால் 7 ரன்களில், ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

18:52 (IST)05 May 2019

இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்குறேன்!!

36 பந்துகளில் 71 ரன்கள் விளாசிய லோகேஷ் ராகுல் ஹர்பஜன் ஓவரில் கேட்ச் ஆக, அடுத்த பந்திலேயே க்ரிஸ் கெயில் 28 பந்தில் கெயிலும் கேட்ச் ஆனார். 

18:46 (IST)05 May 2019

100-0

9 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 100-0. 

யப்பா சிஎஸ்கே நீங்க தோற்குறது கூட பிரச்சனை இல்லை. ஆனா, மாட்டமா தோற்றுப் போனால் ரன் ரேட் ஏகத்துக்கும் குறையும். இதனால், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கு.

18:38 (IST)05 May 2019

சிஎஸ்கே வெற்றிக்கு வாய்ப்பிருக்கா?

ரொம்ப கஷ்டம்!.

அல்ரெடி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 100 ரன்களை நெருங்கி விட்டது பஞ்சாப். இனி 70 ரன்கள் தான் வெற்றிக்கு தேவை. 

சிஎஸ்கே தனது பந்துவீச்சில் மாபெரும் மேஜிக் ஏதும் நிகழ்த்தினால் மட்டுமே, வெற்றி சாத்தியம். இது சத்தியம்.

18:31 (IST)05 May 2019

16 ஓவரில் என்ட் கார்டு?

7 ஓவர்கள் முடிவில், கிங்ஸ் xi பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்துள்ளது. இப்படியே போனால், 15-16 ஓவர்களில் மேட்ச் முடிந்துவிடும் போல…

கெயில், ராகுலிடம் வசமாக சிக்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்!

18:21 (IST)05 May 2019

60-0

5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது பஞ்சாப். இதில், லோகேஷ் ராகுல் அடித்தது மட்டும் 54 ரன்கள்.

நல்ல பார்ட்னர்ஷிப் போட்டு இருக்கீங்க டா!! இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணுங்க.. 15 ஓவருல ஜெயிச்சிடலாம்.

18:15 (IST)05 May 2019

4,4,4,6,0,6

19 பந்துகளில் லோகேஷ் ராகுல் அரைசதம் விளாசினார். அப்புறம் மேலே இருக்கும் நம்பர்ஸ் பின் கோட் இல்லை. 

ஹர்பஜன் ஓவரில் லோகேஷ் ராகுல் தனி ஆளாக அடித்த ரன்கள் இவை.

18:11 (IST)05 May 2019

திக்குத் தெரியாமல் முழிக்கும் சிஎஸ்கே

3 ஓவரில் 33 ரன்கள் எடுத்துள்ளது கிங்ஸ் XI பஞ்சாப். இதில், கெயில் அடித்திருப்பது வெறும் 4 ரன்களே. குறிப்பாக ஹர்பஜன் ஓவரை வஞ்சம் வைத்து பொளக்கிறார் லோகேஷ் ராகுல்.

18:04 (IST)05 May 2019

2 ஓவரில் 3 சிக்ஸ்

முதல் ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த கே எல் ராகுல், ஹர்பஜன் வீசிய அடுத்த ஓவரில் 2 பேக் டூ பேக் சிக்ஸர்களை பறக்கவிட, மொஹாலி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஏக குஷி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மொமன்ட்ஸ் மிஸ் ஆகுதே!!!

17:56 (IST)05 May 2019

களத்தில் பிரடேட்டர்

171 ரன்கள் இலக்கை நோக்கி கிங்ஸ் xi பஞ்சாப் அணி…

க்ரிஸ் கெயில், லோகேஷ் ராகுல் களத்தில்,,,

15வது ஓவர்லயே ஜெயிச்சுடுவாங்களோ!!

17:44 (IST)05 May 2019

171 ரன்கள் இலக்கு

டு பிளசிஸ், ரெய்னா அடித்த அடியைப் பார்த்த போது எப்படியும் சென்னை சூப்பர் கிங்ஸ் 190 தாண்டும் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நான்கு ஓவரில் பெரியளவில் சென்னை சொதப்பியது. 12 பந்துகளை சந்தித்த தோனியால் 1 பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இதனால், 170 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்தது.

17:37 (IST)05 May 2019

ராயுடு, ஜாதவ் அவுட்

ஷமி வீசிய கடைசி ஓவரில் ராயுடு, ஜாதவ் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக, சென்னையின் ரன் ரேட் அதள பாதாளத்திற்கு போய்விட்டது.

17:30 (IST)05 May 2019

’96’

விஜய் சேதுபதி படம்-னு நினைச்சுடாதீங்க…

அதிரடியாக ஆடிய டு பிளசிஸ் 55  ரன்களில் 96 ரன்கள் எடுத்திருந்த போது, சாம் குர்ரனின் அபாரமான யார்க்கர் பந்தில் போல்டானார். 

17:24 (IST)05 May 2019

தோனி களத்தில்….

ரெய்னா அவுட்டான பிறகு, தோனி களத்தில்… 

எகிறிய ரன் ரேட், சற்றே சரிந்துள்ளது.

17:15 (IST)05 May 2019

4,4,6,2,1,1

ஆண்ட்ரூ டை வீசிய 16வது ஓவரில் டு பிளசிஸ் அடித்த ரன்கள் இவை…

16 ஓவர்கள் முடிவில் 142/1

17:07 (IST)05 May 2019

சின்ன தல 50

சுரேஷ் ரெய்னா மீண்டும் பார்முக்கு வந்திருப்பது உண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மிகப்பெரிய ஆறுதலே. கடந்த போட்டியை தொடர்ந்து, இன்றைய போட்டியிலும் ரெய்னா அரைசதம். 

கமான் குட்டித் தல!!!

17:04 (IST)05 May 2019

தோனி களமிறங்க வாய்ப்பு

இப்போதே 14 ஓவர்கள் நெருங்கி விட்டது. டு பிளசிஸ், ரெய்னா சிறப்பாக ஆடினாலும் ரன் ரேட் பெரியளவில் இல்லை. ஸோ, இப்போ ஒரு விக்கெட் விழுந்தாலும், தோனி இறங்குவது ஏறக்குறைய கன்ஃபார்ம்.

17:01 (IST)05 May 2019

டு பிளசிஸ் 50

டு பிளசிஸ் 37 ரன்களில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 

பஞ்சாப்புக்கு எதிரா தான்யா எல்லாரும் ஃபார்முக்கு வர்றானுங்க!! அந்த டீமை அவ்ளோ பிடிச்சிருக்கு போல!!

16:52 (IST)05 May 2019

அரைசதம் நோக்கி டு பிளசி

பஞ்சாபின் மோசமான பீல்டிங் அப்பட்டமாக இன்று தெரிகிறது. அதுவும் லோகேஷ் ராகுல் போன்ற செம பீல்டர்கள் கூட மொக்கை செய்வது அபத்தம். 

இந்த கூத்துக்கு நடுவே அரைசதத்தை நோக்கி நம்ம டு பிளசிஸ்…

16:50 (IST)05 May 2019

79/1

10 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. 

ரெய்னா, டு பிளசிஸ் களத்தில்…

16:34 (IST)05 May 2019

180+ கிடைக்குமா?

பஞ்சாபில் சென்னை தற்போது ஆடி வரும் முறையைப் பார்த்தால், எப்படியும் 170 + தாண்டும் என எதிர்பார்க்கலாம். பந்தில் டர்ன் இருந்தாலும், பேட்ஸ்மேன்களை அது பெரிதாக தொந்தரவு செய்யவில்லை.

ஆனால், இந்த வெயில் தான் பாடாய் படுத்துகிறது.

16:29 (IST)05 May 2019

வாட்சன் அவுட்

இம்முறையும் சென்னையை டீலில் விட்டுப் போயிருக்கிறார் ஷேன் வாட்சன். 7 ரன்களில் சாம் குர்ரன் ஓவரில் தனது ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுத்திருக்கிறார்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 019 csk vs kxip live cricket score updates

Next Story
RCB vs SRH: காலம் கடந்த வெற்றி! காலம் கடந்த ஹெட்மயர் அதிரடி! விடை பெற்றது பெங்களூருRCB vs SRH Live Score, RCB vs SRH Playing 11 Live Score
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express