Chennai Super Kings vs Royal Challengers Bangalore: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.21) இரவு எட்டு மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது.
மேலும் படிக்க - KKR vs SRH Playing 11 Live Score: கொல்கத்தா vs ஹைதராபாத் லைவ்
Live Blog
CSK vs RCB, IPL 2019 CSK vs RCB
இப்போதும் சொல்கிறேன் பெங்களூரு தான் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது. கடைசி ஓவரை எப்படியும் ஸ்டெய்ன் தான் வீசுவார். அந்த ஓவரில் தோனியால் 11 ரன்கள் அடிப்பது கூட கடினம் தான்.
அண்ணே! இப்படிலாம் சொல்றீங்களே.. தோனி ரசிகர்கள் காண்டாக மாட்டாங்களா?
என்ன நினைத்தாலும் அதுதான் உண்மை!.
இப்போதுள்ள நிலைமைக்கு பெங்களூருவுக்கு தான் சாதகம் அதிகம். ஏனெனில், இப்போது 2 விக்கெட் இழந்திருந்தால் கூட, சென்னைக்கு பெரிதாக பிரச்சனை இல்லை. ஆனால், நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டார்கள்.
யுவேந்திர சாஹலுக்கு நான்கு ஓவர்கள் இருக்கிறது. அதில் எப்படியும் 1 விக்கெட் வீழ்ந்துவிடும்.
இறுதியில் மீண்டும் ஸ்டெய்ன் அட்டாக் செய்வார்.
ஸோ, சென்னைக்கு தான் ஆபத்து அதிகம்.
பெங்களூரு அணி தொடக்கக் கட்டத்தில் மோசமாக விளையாடி தோல்விகளை சந்தித்தது. இரண்டாம் பாதியில் தற்போது வெற்றிகளை ரெஜிஸ்டர் செய்து வருகிறது.
ஆனால், சிஎஸ்கே இரண்டாம் பாதியில் சொல்லிக் கொள்ளும் படி ஆடவில்லை. தொடர்ச்சியாக தடுமாறுகிறது. ஹைதராபாத்தில் ஒரு மட்டமான தோல்வியை சந்தித்தப் பிறகு பெங்களூருவிடம் இன்று மற்றுமொரு மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.
கணிப்பு ப்ரோ... இன்று யார் ஜெயிக்கப் போவது?
கண்ணாயிரம் - தோனி, பிராவோ அணிக்கு திரும்பியிருப்பது மிகப்பெரிய பலம் சிஎஸ்கே-வுக்கு. பேலன்ஸ் இப்போது சற்று கிடைக்கிறது.
ஆனால், 'இனி இழக்க ஒன்றுமில்லை' என்ற மனநிலையில் ஆடும் பெங்களூரு, சென்னைக்கு கடும் ஃபைட் கொடுக்க வாய்ப்புள்ளது.
சிஎஸ்கே - 57%
ஆர்சிபி - 43%
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights