Advertisment

இவ்வளவு கேட்சுகளையா விடுவது? மிக மோசமான தோல்வியை சந்தித்த கொல்கத்தா

IPL KKR vs SRH: கொல்கத்தா தோல்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KKR vs SRH Live Score, KKR vs SRH Playing 11 Live Score

KKR vs SRH Live Score, KKR vs SRH Playing 11 Live Score

IPL 2019 KKR vs SRH: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.21) மாலை 4 மணிக்கு ஹைதராபாத் உப்பல் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

Live Blog

Advertisment

IPL 2019: KKR vs SRH



























Highlights

    19:18 (IST)21 Apr 2019

    ஹைதராபாத் வெற்றி

    ஹைதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் மட்டும் இழந்து 161 ரன்கள் எடுத்து மெகா வெற்றிப் பெற்றது. 

    கொல்கத்தா தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    19:01 (IST)21 Apr 2019

    போனா போது விடு...

    அப்படித் தான் வார்னர் இப்போது அவுட்டாகி போயிருக்கார். வரிசையாக கேட்சுகளை கோட்டை விட்டு கொடை வள்ளலாக மாறிப் போன கொல்கத்தா அணி இறுதியாக வார்னரை அவுட் செய்துள்ளது. 

    38 பந்துகளில் 67 ரன்கள் விளாசிய வார்னர், யர்ரா ப்ரித்விராஜ் ஓவரில் போல்ட் ஆனார். 

    18:47 (IST)21 Apr 2019

    வார்னர், பேர்ஸ்டோ 50

    'எதிர்பார்த்தது தான்' நினைக்குற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இருந்தாலும், உண்மையை பதிவு செய்ய வேண்டியது நமது கடமை. 

    வார்னர், பேர்ஸ்டோ இருவரும் இன்றையைப் போட்டியில் அரைசதம் விளாசியுள்ளனர்.

    10 ஓவர்கள் முடிவில் 109-0

    18:34 (IST)21 Apr 2019

    பிரித்து மேயும் பேர்ஸ்டோ...

    இந்த ஹைதராபாத்துக்கு பலமே ஓப்பனிங் பேட்ஸ்மேன்ஸ் தான். வார்னர் - பேர்ஸ்டோ ஜோடியை மட்டும் ஆரம்பத்துலயே காலி செய்துவிட்டால், ஹைதராபாத்தை சரித்து விடலாம். ஆனால், அந்த ஒப்பனிங்கை பிரிப்பது தான் பெரும் சிக்கலாக உள்ளது. 

    7 ஓவர்கள் முடிவில் 80-0

    18:09 (IST)21 Apr 2019

    அதே கண்கள்... அதே தொடக்கம்

    160 இலக்கை நோக்கி களமிறங்கியிருக்கும் ஹைதராபாத் அணியின் ஓப்பனர்ஸ் ஜானி பேர்ஸ்டோ - டேவிட் வார்னர் ஜோடி வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்துடன் போட்டியை துவக்கியுள்ளது.

    17:45 (IST)21 Apr 2019

    160 டார்கெட்!

    2.4 ஓவரில் கொல்கத்தா 41 ரன்கள். ஆட்டம் முடியும் போது, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள். 

    நீங்க ரசல் பேட்டிங் ஆர்டரை மாற்றாத வரை ம்ஹூம்!!

    17:37 (IST)21 Apr 2019

    ரசல் டவுனை மாத்துங்கப்பா!

    ஆந்த்ரே ரசல் பேட்டிங் ஆர்டரை கொஞ்சம் முன்னோக்கி மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்கும்.... எங்களுக்கு இல்ல கொல்கத்தாவுக்கு... அந்த மனுஷனை 17வது ஓவரில் இறக்கி 10 சிக்ஸ் அடிக்கணும்-னு எதிர்பார்த்தா எப்படி?

    ஐபிஎல் எந்தளவுக்கு வர்த்தக நோக்கமுடையது என்பது ரசல் மிகச் சிறந்த சான்று

    9 பந்துகளில் 15 ரன்களில் ரசல் அவுட்!

    17:03 (IST)21 Apr 2019

    அதலபாதாளத்தில் வீழ்ந்த ரன் ரேட்

    11 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா 4 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா தனது முதல் விக்கெட்டான சுனில் நரைனை இழந்த போது அடிக்கப்பட்ட ரன்கள் 2.4 ஓவர்களில் 42/1. அதற்கு அடுத்த 8 ஓவர்களில் மொத்தமாகவே அந்த அணி 41 ரன்களே எடுத்திருக்கிறது.

    16:44 (IST)21 Apr 2019

    டிகே... என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க?

    3 விக்கெட்டுகள் இழந்த பிறகு களமிறங்கிய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் தேவையில்லாத ரன்னிங்கால் ரன் அவுட் செய்யப்பட்டார். தற்போது களத்தில் யார் தெரியுமா?

    க்ரிஸ் லின் - ரிங்கு சிங்!

    16:37 (IST)21 Apr 2019

    முடிஞ்சது ஜோலி!

    புவனேஷ் குமார் ஓவரில், நிதிஷ் ராணா 11 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். களத்தில் தினேஷ் கார்த்திக்...

    ஒரு நல்ல மேட்ச் பார்க்கலாம்-னு ஆர்வமா இருந்தா இப்படி சொதப்புறாய்ங்களே!!

    16:30 (IST)21 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    அண்ணே... வணக்கம்ணே... உங்களைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு!? எப்படி இருக்கீங்க?

    கண்ணாயிரம் - என அறிவார்ந்த தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். நல்லா இருக்கேன் தம்பி. இன்றையப் போட்டியில் கொல்கத்தா 180+ அடித்துவிட்டால் வெற்றிப் பெற வாய்ப்புள்ளது. 200 அடிச்சால் இன்னும் வசதி. 

    கொல்கத்தாவுக்கு பேட்டிங் பலம், ஹைதராபாத்துக்கு பவுலிங் பலம்.

    16:24 (IST)21 Apr 2019

    கில்... ஓ மை மேன் ஈஸ் கான்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் காளை ஷுப்மன் கில் வெறும் 3 ரன்களில், கலீல் அஹ்மத்தின் மற்றொரு ஸ்லோ பந்தில் கேட்ச் ஆனார். 

    ஸோ சேட்!

    'நான்காவது ஸ்லாட்டில் நான் இறங்கினால் நன்றாக இருக்கும்'-னு பட்டும் படாமல் ஆந்த்ரே ரசல் பொதுவா பேசினார். அதை இன்று கொல்கத்தா நிரூபிச்சுடுவாங்க போலயே!!

    16:15 (IST)21 Apr 2019

    சுனில் நரைன் அவுட்

    8 பந்துகளில் 25 ரன்கள் விளாசிய சுனில் நரைன், கலீல் அஹ்மத்தின் ஸ்லோ பந்தில் தனது லெக் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். 

    அடச்சே, செம என்டர்டெயின்மெண்ட் போச்சே...!

    16:07 (IST)21 Apr 2019

    கொல்கத்தா பேட்டிங்! உத்தப்ஸ் எங்கடா?

    டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஆச்சர்யமாக கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment