Advertisment

IPL 2019 CSK vs RCB: நிதானமாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Chennai Super Kings vs Royal Challengers Bangalore

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2019 CSK vs RCB

IPL 2019 CSK vs RCB

IPL 2019 CSK vs RCB: ஐபிஎல் 12வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 70 ரன்களில் சுருண்டது. ஆர்.சி.பி. இவ்வளவு மோசமாக விளையாடும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது... அதேசமயம், சேப்பாக் பிட்சும் ஸ்பின்னுக்கு அபாரமாக ஒத்துழைத்தது. மிக பயங்கரமாக ஸ்பின் ஆனது. சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்திருந்தால் கூட, நிச்சயம் தடுமாறித் தான் போயிருக்கும். இதன்பிறகு, சேஸிங் செய்த சிஎஸ்கே 17.4வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் எடுத்து வென்றது.

Advertisment

மேலும் படிக்க - IPL 2019: வேண்டாம் ஆர்சிபி! இது மஞ்சள் மாஞ்சா... வார்த்தையை விட்டு சிக்கிடாதீங்க!

Live Blog

CSK vs RCB IPL 2019 Live Cricket Score: சிஎஸ்கே vs ஆர்சிபி லைவ்














Highlights

    23:23 (IST)23 Mar 2019

    'ஆட்ட நாயகன் விருது'

    மூன்று ஓவர்கள் வீசி, 20 ரன்கள் விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகன் விருது வென்றார். 

    23:22 (IST)23 Mar 2019

    'இந்த பிட்ச் பயங்கரமானது'

    "பிட்ச் இந்தளவிற்கு மெதுவாக இருக்கும் என நான் கூட நினைக்கவில்லை. எதிரணியை பேட்டிங் செய்ய வைத்து, சேஸிங் செய்யலாம் என்று நினைத்து தான் பீல்டிங் தேர்வு செய்தேன். ஆனால், பிட்ச் இப்படியே எதிரொலித்தால், எங்களுக்கு இது கடினமான பிட்சாக அமைந்துவிடும்" என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 

    23:05 (IST)23 Mar 2019

    சிஎஸ்கே வெற்றி!

    ஒருவழியாக 17.4வது ஓவரில் 71 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றிப் பெற்றது நடப்பு சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ். 

    22:58 (IST)23 Mar 2019

    வெற்றிக்கு அருகில் சிஎஸ்கே

    சென்னை வெற்றிப் பெற இன்னும் 3 ரன்களே தேவை. 

    22:57 (IST)23 Mar 2019

    வெற்றிக்கு அருகில் சிஎஸ்கே

    16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது சிஎஸ்கே. வெற்றிக்கு இன்னும் 3 ரன்களே தேவை.

    22:48 (IST)23 Mar 2019

    ஜத்து இன்...

    இப்போதாவது  வருவார் என எதிர்பார்த்தால், நம்ம ஜத்துவை இறக்கி விட்டு சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார் தோனி. சேப்பாக்கில் மயான அமைதி.

    22:46 (IST)23 Mar 2019

    ஸ்டெம்ப்புகள் சிதற....

    முகமது சிராஜ் ஓவரில் ஸ்டெம்ப்புகள் சிதற 28(42) வெளியேறினார் அம்பதி ராயுடு. 

    22:43 (IST)23 Mar 2019

    யாருய்யா இந்த சைனி?

    பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சைனி, கொஞ்சம் கவனம் ஈர்க்கும் விதத்திலேயே பவுலிங் செய்கிறார். அவருடைய ஸ்டைல், அவரது பிளேசிங் நம்மை கவனிக்க வைக்கிறது. 

    22:38 (IST)23 Mar 2019

    52-2

    13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்

    22:27 (IST)23 Mar 2019

    ஜாதவ் இன்

    ரெய்னா அவுட்டான பிறகு 'தல' இறங்கி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், கேதர் ஜாதவ் களமிறக்கப்பட்டார். 

    22:23 (IST)23 Mar 2019

    ரெய்னா அவுட்!

    மொயின் அலி ஓவரில் சிக்ஸ் அடிக்க நினைத்து, 19 ரன்களில் வெளியேறினார் சுரேஷ் ரெய்னா. இருப்பினும், 5000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டி அபார சாதனை படைத்துள்ள சின்ன தல-க்கு வாழ்த்துகள் தெரிவிப்போம். 

    22:19 (IST)23 Mar 2019

    ரெய்னா 5000

    ஐபிஎல் தொடரில், இன்று 177வது போட்டியில் ஆடும் சுரேஷ் ரெய்னா 5000 ரன்களை கடந்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். 

    22:14 (IST)23 Mar 2019

    பேக் டூ பேக் பவுண்டரிஸ்!

    மொயின் அலியின் ஓவரில் சுரேஷ் ரெய்னா அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடிக்க, மஞ்சள் ஜெர்ஸி ரசிகர்களின் பதட்டம் ஓரளவு  குறைந்துள்ளது. 

    22:12 (IST)23 Mar 2019

    பிட்ச் செய்த மாயம்

    இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியை குறை சொல்வதில் நியாயமில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. சேப்பாக் பிட்சின் கொடூரமான ஸ்பின் டிராக், பேட்ஸ்மேன்களை கட்டிப் போட்டு இருக்கிறது. சிஎஸ்கே வீரர்களும் தடுமாறி வருவதில் இது அப்பட்டமாகி உள்ளது. 

    22:08 (IST)23 Mar 2019

    பவுண்டரி!

    நவ்தீப் சைனியின் லைன் பந்தில், ஒரு அட்டகாசமான ஸ்ட்ரெய்ட் பவுண்டரி விளாசினார் அம்பதி ராயுடு

    22:08 (IST)23 Mar 2019

    பவுண்டரி!

    நவ்தீப் சைனியின் லைன் பந்தில், ஒரு அட்டகாசமான ஸ்ட்ரெய்ட் பவுண்டரி விளாசினார் அம்பதி ராயுடு

    22:05 (IST)23 Mar 2019

    16-1

    ஆறு ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு அணியும் பிட்சை பயன்படுத்தி சிறப்பாகவே பந்து வீசி வருகிறது. 

    21:56 (IST)23 Mar 2019

    ஆர்சிபி அட்டாக்!

    ஸ்பின்னர்களை கொண்டு ஆர்சிபி அணியும், மஞ்சள் ஜெர்சியை பாடுபடுத்தி வருகிறது. ரன்கள் எடுக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். அதிலும், மொயின் அலி ஓவரில், ஒரு கஷ்டமான கேட்சை உமேஷ் யாதவ் தவறவிட்டார். இல்லையெனில், அம்பதி ராயுடுவுக்கு சென்ட் ஆஃப் கொடுக்கப்பட்டிருக்கும். 

    21:50 (IST)23 Mar 2019

    சிக்ஸ் அண்ட் அவுட்!

    ஓருவழியாக சைனி ஓவரில் சிக்ஸ் அடித்து சற்று பிரஷரை குறைத்தார் அம்பதி ராயுடு. அதே சமயம், 10 பந்துகளை சந்தித்த வாட்சன் ரன் கணக்கை துவக்காமலேயே சாஹல் ஓவரில் போல்டானார். 

    21:43 (IST)23 Mar 2019

    மெய்டன் ஓவர்

    சாஹலின் முதல் ஓவர் மெய்டனானது. இதிலிருந்தே, சேப்பாக் பிட்ச் எவ்வளவு அபாயகரமாக இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். சிஎஸ்கே-வுக்கும் சோதனை காத்திருக்கிறது. 

    21:41 (IST)23 Mar 2019

    சிஎஸ்கே களமிறங்கியது

    சிஎஸ்கே-வின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கியுள்ளனர். சாஹல் முதல் ஓவரை வீசி வருகிறார், கடுமையான டர்னுடன்

    21:36 (IST)23 Mar 2019

    என்னாச்சு ஆர்.சி.பி.க்கு?

    ஆர்.சி.பி. இவ்வளவு மோசமாக விளையாடும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது... அதேசமயம், சேப்பாக் பிட்சும் ஸ்பின்னுக்கு அபாரமாக ஒத்துழைத்தது. மிக பயங்கரமாக ஸ்பின் ஆனது. சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்திருந்தால் கூட, நிச்சயம் தடுமாறித் தான் போயிருக்கும்.

    21:18 (IST)23 Mar 2019

    70-9.... உமேஷ் யாதவ் அவுட்!

    76 ஓவர்கள் முடிவில், பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. 2019 ஐபிஎல்-ன் முதல் போட்டியில், ஆர்சிபி இவ்வளவு மோசமாக ஆடியிருக்கத் தேவையில்லை. 

    21:08 (IST)23 Mar 2019

    சாஹல் அவுட்!

    ஸ்பின்னர்களின் ஆதிக்கம் ஓவருக்கு ஓவர் தொடர்கிறது. இம்ரான் தாஹிர் ஓவரில் யுவேந்திர சாஹல் 4 ரன்களில் கேட்ச் ஆனார். ஹர்பஜன், இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் பெங்களூரு அணியை சிதைத்துவிட்டனர் என்றே சொல்லலாம்.

    20:58 (IST)23 Mar 2019

    ஏழாவது விக்கெட்!

    வீசும் எல்லா ஓவரிலும் விக்கெட் விழுந்தால் என்ன செய்வது? ஏழாவது விக்கெட். இம்ரான் தாஹிர் ஓவரில் நவ்தீப் சைனி 2 ரன்னில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

    20:52 (IST)23 Mar 2019

    ஆறாவது விக்கெட்!

    ஜடேஜா ஓவரில் காலின் டி கிரான்ட்ஹோம் 4 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது ஆர்சிபி-யின் ஆறாவது விக்கெட்டாகும். சிஎஸ்கே ஸ்பின்னர்களிடம் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக அடங்கிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். 

    20:47 (IST)23 Mar 2019

    ஷிவம் துபே அவுட்!

    இம்ரான் தாஹிர் ஓவரில், வெறும் 2 ரன்களில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஷிவம் துபே. ஆர்சிபி வெற்றிப் பெற வேண்டும் என்று ஆடியது போல் தெரியவில்லை. 

    20:41 (IST)23 Mar 2019

    ஹெட்மயர் ரன் அவுட்!

    அதே ஹர்பஜன் ஓவரில், அதிரடி வீரர் ஹெட்மயர் ரன் அவுட் ஆக, நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி அணி தத்தளிக்கிறது.

    20:36 (IST)23 Mar 2019

    டி வில்லியர்ஸ் அவுட்!

    அட்டகாசமாக பவுலிங் செய்து கொண்டிருக்கும் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில், டி வில்லியர்ஸுக்கு இம்ரான் தாஹிர் கேட்சை தவறவிட, அதற்கு அடுத்த பந்திலேயே, ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹர்பஜன் மூன்று முக்கிய விக்கெட்டுகளை அள்ளி அசத்தியுள்ளார். 

    20:25 (IST)23 Mar 2019

    மொயின் அலி அவுட்!

    ஹர்பஜனின் ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் மொயின் அலி. திட்டமிடல் இல்லாத ஆட்டம் போல் இருக்கிறது ஆர்சிபி-யின் ஆட்டம். 

    20:20 (IST)23 Mar 2019

    லவ்லி சிக்ஸ்!

    ஹர்பஜன் ஓவரின் கடைசி பந்தில், மொயின் அலி மிட்-விக்கெட்டில் ஒரு அழகான சிக்ஸ் அடிக்க, ஐபிஎல் 2019ன் முதல் சிக்ஸரை அது பதிவு செய்தது.

    20:16 (IST)23 Mar 2019

    விராட் கோலி அவுட்!

    ஹர்பஜன் சிங்கின் ஓவரில் விராட் கோலி 12 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் எடுத்து ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    20:06 (IST)23 Mar 2019

    முதல் ஓவரில் 5

    தீபக் சாஹரின் முதல் ஓவரில் 5 ரன்கள் எடுக்கப்பட்டது.

    20:01 (IST)23 Mar 2019

    களமிறங்கியது ஆர்சிபி

    ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, பார்த்திவ் படேல் களமிறங்கியுள்ளனர். தீபக் சாஹர் சிஎஸ்கே-வின் முதல் ஓவரை வீசி வருகிறார். 

    19:55 (IST)23 Mar 2019

    சிஎஸ்கே அணி பிளேயிங் XI

    ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (C&WK), கேதர் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துள் தாக்கூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்

    19:43 (IST)23 Mar 2019

    டாஸ் வென்று சிஎஸ்கே பவுலிங்

    டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 

    18:40 (IST)23 Mar 2019

    சிஎஸ்கே உத்தேச பிளேயிங் XI

    ஷேன் வாட்சன், டூ பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (C&WK), கேதர் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், கர்ன் ஷர்மா, ஷர்துள் தாக்கூர்

    18:21 (IST)23 Mar 2019

    மைதானத்திற்கு வந்த டீம் சிஎஸ்கே

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், தங்கள் ஹோட்டலில் இருந்து சேப்பாக் ஸ்டேடியத்திற்கு வந்து சேர்ந்தனர். இரவு 07.30 டாஸ் போடப்படுகிறது.

    18:10 (IST)23 Mar 2019

    மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

    போட்டியை காண ரசிகர்கள் 5.30 மணியளவில் இருந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், மைதானத்திற்கு வெளியே இப்போதே ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ரசிகர்கள், ரசிகைகள் கொண்ட மஞ்சள் ஆர்மி சேப்பாக் ஸ்டேடியத்தை ஆக்கிரமித்துள்ளது.

    Chennai Super Kings Ipl Rcb
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment