ஐபிஎல்-ல் நேற்றைய தினம் மஹி தினம்... யெஸ், இட்ஸ் எ தோனி'ஸ் டே...
சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் நேற்று(மார்ச்.31) நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தானின் கடும் வெறித்தனத்துக்கு இடையே சிஎஸ்கே வென்றது உண்மையில் ஆச்சர்யமே.
ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் போன்ற பேராளுமைகளை வைத்துக் கொண்டும் தொடர்ந்து இரு போட்டியில் தோல்வி... ஸோ, வென்றே ஆக வேண்டும் என்ற வேட்கையுடன் நேற்று சிஎஸ்கே-வை பதம் பார்க்கத் தொடங்கியது ராஜஸ்தான்.
27-3 என்று முதலில் ஆடிய சிஎஸ்கே தத்தளிக்க, ரெய்னா - தோனி பார்ட்னர்ஷிப் அணியை மீட்டெடுக்க போராட, இடையில் ரெய்னா 36 ரன்கள் போல்டானார். தொடர்ந்து, பிராவோ-வுடன் தோனி ஒரு அதிரடியான பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சிக்கும் போது, பிராவோ 27 ரன்களில் பிச்சிக் கொண்டார்.
இறுதியில், தனியாளாக நின்ற தோனி, உணட்கட் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி 46 பந்துகளில் 75 ரன்கள் குவிக்க, சிஎஸ்கே 175 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான், விக்கெட் வீழ்ச்சி பற்றியெல்லாம் கவலையே இல்லாமல், வெற்றி என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஆடி வந்தது. இறுதி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் பென் ஸ்டோக்ஸ் நிற்க, வெற்றியும் ராஜஸ்தான் பக்கமே நின்றது.
ஆனால், முதல் பந்தில் ஸ்டோக்ஸ் கேட்ச் ஆக, அந்த ஒவரில் 3 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து, பிராவோ வெற்றியை வசப்படுத்தினார்.
ஃபைனலி, சிஎஸ்கே தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
ஆனால், 6வது ஓவரிலேயே தோனி அவுட்டாகி இருக்க வேண்டியது என்பது போட்டியை பார்க்காத பலருக்கும் தெரியாது. ஏன், போட்டியை டிவி-யில் பார்த்தவர்கள் கூட சரியாக கவனிக்காமல் விட்டிருப்பார்கள்.
ஆம்... ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 6வது ஓவரில், தோனி ஒரு டிஃபன்சிவ் ஸ்டோக் செய்ய, பந்து அவரது பின்னங்காலில் பட்டு, ஸ்டம்ப்பை தாக்கியது. ஆனால், அதில் பைல்ஸ் கீழே விழாத காரணத்தினால் தோனி அவுட் ஆகவில்லை.
இல்லையெனில், நேற்று என்ன நடந்திருக்கும் என நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்!.