/tamil-ie/media/media_files/uploads/2019/04/z351.jpg)
CSK vs SRH Live Streaming, CSK vs SRH Live Telecast
IPL 2019 CSK vs SRH Live Streaming on TV: வெற்றிப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சி.எஸ்.கே. ஆச்சர்யமாக இருந்தாலும், அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. நேற்று வரை புள்ளிப்பட்டியலில் முதலிடம். இன்று இரண்டாவது இடம்.
பிளே ஆஃப்-க்கு தகுதிப் பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இல்லை.
ஆனால்,
பவர் பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழப்பதில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,
நல்ல ஓப்பனிங் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,
வாட்சன், ராயுடு, ரெய்னா போன்றவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,
இவை அனைத்தையும் விட, இரண்டு தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டிய பெரும் கட்டாயத்தில் உள்ளது சிஎஸ்கே.
இப்படி பல கட்டாயங்கள் அடங்கிய வெற்றியை நோக்கி, உள்ளூரில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இப்போட்டி தொடங்குகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் மூலம் தொலைக்காட்சியில் போட்டியை காணலாம். ஹாட்ஸ்டார் ப்ரீமியம் மூலம் ஆன்லைனில் போட்டியை காணலாம்.
தவிர, தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸ் தளம் மூலம் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் பிரத்யேக லைவ் அப்டேட்ஸ் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.