Advertisment

DC vs CSK: 80 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

IPL DC vs CSK Live Score Updates: டெல்லி vs சென்னை லைவ்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
DC vs CSK Live Score, DC vs CSK Playing 11 Live Score

DC vs CSK Live Score, DC vs CSK Playing 11 Live Score

IPL 2019 DC vs CSK: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.1) இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

Advertisment

மேலும் படிக்க - திமிராக விளையாடினால் சிஎஸ்கே-வை வீழ்த்தலாம்... ஆனால், காயம்பட்ட சிங்கத்தை அடக்க அது போதாது!

Live Blog

IPL 2019: DC vs CSK














Highlights

    23:28 (IST)01 May 2019

    தோனி ஷோ

    ப்ரித்வி ஷா முதல் ஓவரில் அவுட்டான பிறகு, ஷ்ரேயாஸ் ஐயரும், ஷிகர் தவானும் அருமையான இன்னிங்ஸ் ஆடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே, இவர்களது துரிதமான ஆட்டத்தில் சற்று மிரண்டே போனது. ஆனால், ஹர்பஜன் சிங் தவான் ஸ்டெம்ப்புகளை காலி செய்ய, மறுபக்கம் சென்னையின் ஸ்பின்னர்கள், டெல்லியின் ஆட்டத்தையே கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் போராடினாலும், ஸ்டெம்புக்கு பின்னால் இருக்கும் தோனியை தாண்டி அவரால் எதையும் செய்ய முடியவில்லை. இறுதியில் 99 ரன்களில் தோனி - இம்ரான் தாஹிர் ஜோடி டெல்லியை முடக்கியது.

    23:15 (IST)01 May 2019

    80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    டெல்லி கேபிடல்ஸ் அணி 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. 

    டெல்லி அணியில் 2 வீரர்களைத் தவிர, மற்ற அனைவரும் ஒற்றை இலக்கில் அவுட்டாகியுள்ளனர். 

    23:08 (IST)01 May 2019

    92-8

    டெல்லி கேபிடல்ஸ் 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. 

    தோல்வியை நோக்கி டெல்லி கேபிடல்ஸ்...

    22:55 (IST)01 May 2019

    உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்...

    இந்த வாக்கியத்தை வேறு யாருக்கு நாம் சொல்ல முடியும்? சாட்சாத் தோனிக்கு தான். 

    அடுத்தடுத்து இரண்டு மின்னல் வேக ஸ்டெம்பிங்கை நிகழ்த்தி, சக வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தோனி. சிறப்பாக ஆடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

    22:48 (IST)01 May 2019

    ரூதர்ஃபோர்டு அவுட்

    இம்ரான் தாஹிர் மீண்டும் ஒரு அட்டகாசமான டெலிவரியில் ரூதர்ஃபோர்ட் விக்கெட்டை 2 ரன்களில் கைப்பற்ற, டெல்லி தனது 6வது விக்கெட்டை இழந்தது.

    22:46 (IST)01 May 2019

    அக்ஷர் படேல் அவுட்

    இம்ரான் தாஹிர் ஓவரில் எட்ஜ் ஆன அக்ஷர் படேல், 9 ரன்களில் ஸ்லிப்பில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    தாஹிருக்கு இது இரண்டாவது விக்கெட்... கொண்டாட மெரீனா பீச் பக்கமாக ஓடிக்கிட்டு இருக்கார். வந்துடுவார்.

    22:37 (IST)01 May 2019

    75-4

    9 ஓவர்கள் முடிவில், டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.

    ஷ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல் களத்தில்....

    22:32 (IST)01 May 2019

    காலின் இங்ரம் அவுட்

    ரவீந்திர ஜடேஜாவின் ஒரு நல்ல டர்ன் பந்தில், இங்ரம் 0 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். 

    கோல்டன் டக் இங்ரம்!!

    22:24 (IST)01 May 2019

    எதுக்கு இந்த ஷாட்?

    இம்ரான் தாஹிரின் ஓவரில் 5 ரன்களில் ரிஷப் பண்ட் தேவையில்லாமல் தூக்கி அடித்து, பிராவோ கைகளில் கொடுத்து வெளியேறினார். 

    அப்ரிடி அடிப்பதை விட தேவையில்லாத ஷாட் அது!

    22:18 (IST)01 May 2019

    தவான் போல்ட்

    ஷிகர் தவான் 19 ரன்களில் ஹர்பஜனின் ஸ்ட்ரெய்ட் பந்தை அக்ராஸ் தி லைன் ஆடச் சென்று ஸ்டெம்ப்புகளை பறிகொடுத்தார்.

    அதாவது, ஷிகர் தவன் அவுட்! புரியுற மாதிரி சொல்லுய்யா!!!

    22:16 (IST)01 May 2019

    மிரட்டும் ஷ்ரேயாஸ்

    டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இறங்கியதில் இருந்தே, சிஎஸ்கே பவுலர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஆடி வருகிறார். அவருக்கு போடும் பந்துகள் எல்லாமே அல்வா துண்டுகளை போல் உள்ளது. 

    என்ன செய்யப் போகிறார் தோனி?

    22:09 (IST)01 May 2019

    ஹர்பஜன்... உங்க கைல தான் இருக்கு

    பவர்பிளேயில் அபாரமாகவும், சிக்கனமாகவும் பந்து வீசும் ஹர்பஜன் ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் அசத்தலாக சிக்ஸ் அடிக்க, தோனிக்கே சற்று அதிர்ச்சி தான். 

    விக்கெட் எடுப்பார்-னு பார்த்தா சிக்ஸ் கொடுக்குறாப்ளயே!!

    21:59 (IST)01 May 2019

    இது 'மன்னன்' வகையறா

    தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில், மன்னன் படத்தில் விஜயசாந்தியை ரஜினிகாந்த் அறைந்தது போல, ஆஃப் சைடில் ப்ரித்வி ஷா அறைய, பந்து நேராக தவான் கைகளில் சிக்கியது. 

    4 ரன்களில் ப்ரித்வி அவுட்!

    21:54 (IST)01 May 2019

    தவான் களத்தில்... எச்சரிக்கை!

    நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் மிக மோசமாக ஆடி வந்த ஷிகர் தவான், இரண்டாம் பாதியில் மேட்ச் வின்னராகவே மாறிவிட்டார். டெல்லி இப்போது நம்பர்.1 இடத்தில் இருப்பதற்கு இவரது பங்களிப்பு அதிகம்.

    21:50 (IST)01 May 2019

    36 பந்துகளில் 91

    சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி 6 ஓவர்களில் மட்டும் 91 ரன்கள் விளாசியது. அதனால் தான் 180 எனும் ஓரளவுக்கு டீசன்ட்டான டார்கெட்டை சென்னையால் நிர்ணயிக்க முடிந்தது. 

    21:40 (IST)01 May 2019

    180 ரன்கள் இலக்கு

    தொடக்கத்தில் மிக மந்தமாக ஆடிய சிஎஸ்கே கடைசி 10 ஓவர்களில் அபாரமாக ஆடி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. 

    கேப்டன் தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். போல்ட் வீசிய கடைசி ஓவரில் கடைசி 2 பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பினார் தோனி!

    21:21 (IST)01 May 2019

    ரசிகர்கள் அதிர்ச்சி!

    ரெய்னா 37 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து, சுசித் ஓவரில் தவானிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து பிராவோ களமிறங்குவார் என எதிர்பார்த்தால், ஜடேஜா பேட்டுடன் வர அனைவருக்கும் பேரதிர்ச்சி!.

    21:01 (IST)01 May 2019

    தோனி களத்தில்....

    முழுக்க ஒன்டே பிளேயராகவே மாறிப் போன டு பிளசிஸ் 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அக்ஷர் படேல் ஓவரில் ஸ்ட்ரெய்ட்டில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். 

    தோனி களத்தில்....

    20:57 (IST)01 May 2019

    சிக்ஸ்...

    அடடே!! சிக்ஸ்-லாம் பறக்குதே சென்னை இன்னிங்சுல...ரூதர்ஃபோர்டு ஓவரில் டு பிளசிஸ் ஓவர் எக்ஸ்டிரா கவரில் ஒரு அட்டகாசமான சிக்ஸ் கிடைத்தது.

    20:53 (IST)01 May 2019

    69/1

    சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. பெரிய ஷாட்கள் அடிக்க முடியாததால் சென்னை தடுமாறி வருகிறது. 

    மறுபடியும் ஒரு லோ ஸ்கோரிங் கேம்...

    20:45 (IST)01 May 2019

    தோனியால் சிறப்பாக ஆட முடியுமா?

    டாஸ் போடும் போது பேசிய தோனி, "கடந்த இரு நாட்களாக எனக்கு ஜூரம் இல்லை. ஆனால், சற்று பலவீனமாக இருக்கிறேன்" என்றார்.

    ஆகையால், இன்று அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்பதை இதர சிஎஸ்கே வீரர்கள் நினைவில் கொண்டு, தோனிக்கு சப்போர்ட் செய்தால் நல்லது.

    20:40 (IST)01 May 2019

    50-1

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. 

    20:21 (IST)01 May 2019

    சாதனை படைத்த டு பிளசிஸ்

    சென்னை அணியின் முதல் பவுண்டரியே 5வது ஓவரில் தான் கிடைத்தது. க்ரிஸ் மோரிஸ் ஓவரில் டு பிளசிஸ் அந்த மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

    20:17 (IST)01 May 2019

    வாட்சன் அவுட்

    இது உலக வழக்கம் தானே. ஷேன் வாட்சன் 9 பந்துகளில் 0 ரன்களுடன் சுசித் ஓவரில் கேட்ச் ஆனார்.

    பவர் பிளேயில் மகாமட்டமாக ஆடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    20:12 (IST)01 May 2019

    3 ஓவருக்கு 3 ரன்

    சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்துள்ளது. ரன் ரேட் 1..

    என்னா அடி!!

    20:08 (IST)01 May 2019

    சிஎஸ்கே-வின் மிகப்பெரிய பிரச்சனை

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பிரச்சனையே பேட்டிங் தான். கன்சிஸ்டன்ஸி இல்லாத பேட்டிங், ரெய்னா, ராயுடு, வாட்சன் ஆகியோரின் இன்கன்சிஸ்டன்ஸி பெர்ஃபாமன்ஸ் போன்றவற்றை ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தம் சென்னை அணிக்கு உள்ளது.

    19:59 (IST)01 May 2019

    சிஎஸ்கே கார்ட்ஸ் களத்தில்...

    சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் களமிறங்கியுள்ளனர். 

    முதல் ஓவருலயே யார் அவுட் ஆகப் போறாங்களோ!!

    19:47 (IST)01 May 2019

    டெல்லி பிளேயிங் XI

    ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(c), ரிஷப் பண்ட்(w), கோலின் இங்ரம், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு, அக்ஷர் படேல், ஜகதீஷா சுசித், சந்தீப் லமிச்சனே, அமித் மிஸ்ரா, ட்ரெண்ட் போல்ட்

    19:44 (IST)01 May 2019

    சிஎஸ்கே பிளேயிங் XI

    ஷேன் வாட்சன், ஃபாப் டு பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி(w/c), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்

    19:35 (IST)01 May 2019

    தோனி களத்தில்...

    மும்பைக்கு எதிரான போட்டியில் காய்ச்சல் காரணமாக ஆடாத கேப்டன் தோனி இன்று களமிறங்குகிறார். டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்ய, சென்னை பேட்டிங்.

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment