IPL 2019, DC vs KKR: ஐபிஎல் தொடரில், நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், இரு அணிகளும் தலா 185 ரன்கள் அடிக்க, சூப்பர் ஓவர் மூலம், டெல்லி வெற்றிப் பெற்று அசத்தியது
Live Blog
DC vs KKR Live Score
ரசல் வீசிய 11.4வது ஓவரில், ஷ்ரேயாஸ் அடித்த பந்தை சிக்ஸ் லைனில் ஷுப்மன் கில் கோட்டைவிட, அதே ஓவரின் கடைசி பந்தில், மீண்டும் ஷ்ரேயாஸ் தூக்கி அடிக்க, இம்முறை பந்தை லபக் என கெட்டியாக பிடித்துக் கொண்டார் ஷுப்மன். ஆனால், அவரது பின் பாதம், பவுண்டரி லைனை தொட்டது போலவே இருந்தது. இருப்பினும், தேர்ட் அம்பயர் அவுட் கொடுக்க, 43 ரன்களில் வெளியேறினார் ஷ்ரேயாஸ்.
அண்ணே... நீங்க வேற லெவல்-னே.... 170+ கொல்கத்தா அடிக்கும்-னு சொன்னீங்க... 61-5 விக்கெட் விழுந்தும், கொல்கத்தா 185 ரன்னு அடிச்சிருக்கு.. ஜீனியஸ்-னே நீங்க...
முகத்துக்கு நேர புகழ்றது எனக்குப் பிடிக்காது-னு உனக்கு தெரியாதா?
சரிண்ணே... யார் ஜெயிப்பா?
கொல்கத்தா மரண அடி அடிச்சதால, வழக்கத்தை விட டெல்லி கடுப்புல இருக்கும். அதனால, ஆக்ரோஷமும் அதிகமா இருக்கும். பட், இருந்தாலும் கொல்கத்தா ஜெயிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
கொல்கத்தா ஜெயிக்கும்-னு சொல்லி நீ வாயை மூடல, வரிசையா 4 விக்கெட்டு... எப்படியா இது உன்னால மட்டும் முடியுது?
அட விடப்பா... இப்போ, ரசலும், தினேஷும் பார்ட்னர்ஷிப் போட்டு அடிக்குறாங்களா இல்லையா? அதைப் பார்..
போச்சு..போச்சு... வாயை வச்சுட்டியா!! எவன் அவுட்டாகப் போறானோ!! மக்களே நல்லா பார்த்துக்கோங்க, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில், கடைசி நம்பிக்கையாக தினேஷ் கார்த்திக் - ஆண்ட்ரூ ரசல் பார்ட்னர்ஷிப் ஆடி வருகிறது. இந்த பார்ட்னர்ஷிப் குறைந்தது 17 ஓவர்கள் வரையிலாவது களத்தில் இருப்பது அவசியம். இல்லையெனில், கரை சேருவது கடினம்!
ராகுல் திராவிட் கண்டுபிடிப்பில் மற்றொரு மாணிக்கம் என்று ஷுப்மன் கில்-ஐ வர்ணிக்கலாம். கொல்கத்தா அணிக்கு தொடக்கத்திலேயே 4 விக்கெட் வீழ்ந்திருக்கும் நிலையில், களமிறங்கி இருக்கும் ஷுப்மன் கில், சிறப்பாக களத்தை பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், அதைப் பார்க்க நிச்சயம் ஒவ்வொரு இந்தியரும் விரும்புவர் என்பதில் சந்தேகமில்லை.
மக்களே... நிகில் நாயக் பற்றி நான் எதுவும் எழுத சொல்லவில்லை.... நம்பாதீங்க...
அண்ணே.. நமக்குள் இந்த கொடுக்கல், வாங்கல் சகஜம் தானே! லூசுல விடுண்ணே... சரி, இந்த மேட்சுல யார் ஜெயிப்பா?
இந்த மேட்சுல கொல்கத்தா ஜெயிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கு. ஏன்னா, டெல்லிய விட அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொல்கத்தாவில் தான் இருக்காங்க. அதே சமயம், கொல்கத்தா ஸ்பின்னர்களை திறம்பட சமாளிக்கும் அளவுக்கு டெல்லியில் உள்ள இளம் பேட்ஸ்மேன்கள் இன்னும் வளரல. ஸோ, அவங்க திணற அதிக வாய்ப்பிருக்கு. கொல்கத்தா 170+ அடிப்பாங்க-னு நினைக்குறேன். அப்படி அடிச்சா, டெல்லி ஜெயிக்குறது கொஞ்சம் கஷ்டம்...
என்னண்ணே... அதுக்குன்னு இவ்ளோ லென்த்தா-வா பதில் சொல்றது...
கொல்கத்தா அணியின் ஓப்பனராக இன்று களம் இறக்கப்பட்டுள்ளவர் நிகில் நாயக். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் 2015-2018 வரை ஐபிஎல்-ல் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 2018ல் நடந்த ஏலத்தில், கொல்கத்தா நிர்வாகம் இவரை வாங்கியது. 2019ல் நடந்த சையத் முஷ்டக் அலி டிராபி தொடரில், ரயில்வேஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில், ஒரே ஓவரில் இவர் 5 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights