Advertisment

DC vs RR: வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்! டெல்லி கேபிடல்ஸ் வெற்றி!

IPL DC vs RR: டெல்லி வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DC vs RR Live Score, DC vs RR Playing 11 Live Score

DC vs RR Live Score, DC vs RR Playing 11 Live Score

IPL 2019 DC vs RR: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.4) மாலை 4 மணிக்கு டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில், டெல்லி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Advertisment

இப்போட்டியின் லைவ் அப்டேட்ஸ் மற்றும் லைவ் ஸ்கோர் கார்டு காண ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்...

 

Live Blog

IPL 2019: DC vs RR



























Highlights

    19:17 (IST)04 May 2019

    வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்

    116 ரன்கள் இலக்கை 16.1 வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து எட்டியது டெல்லி கேபிடல்ஸ். இதனால், 11 புள்ளிகளுடன் பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

    பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ராஜூஸ்!!!!

    18:43 (IST)04 May 2019

    64/3

    எப்படி 3வது விக்கெட்டு-னு பார்க்குறீங்களா?

    கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களில், ஷ்ரேயாஸ் கோபால் ஓவரில் கேட்ச் ஆனார்.

    18:27 (IST)04 May 2019

    சோதியை சோதித்த டெல்லி

    தவான், ப்ரித்வி விக்கெட்டுகளை காலி செய்த இஷ் சோதி, தனது அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்ஸ், ஒரு பவுண்டரி என வாரி இறைத்துவிட்டார். 

    அந்த 2 சிக்ஸரும் ஐயருடையது.

    18:23 (IST)04 May 2019

    29/2

    5 ஓவர்கள் முடிவில், டெல்லி கேபிடல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.

    பண்ட், ஷ்ரேயாஸ் களத்தில்...

    18:16 (IST)04 May 2019

    ப்ரித்வி புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......

    மீண்டும் ஒரு மரண மொக்கை..

    8 ரன்களில் இஷ் சோதி ஓவரில் ப்ரித்வி ஷா அவுட். 

    சோதி ஆன் ஏ ஹாட்ரிக்!

    18:14 (IST)04 May 2019

    தவான் அவுட்

    அபார ஃபார்மில் இருக்கும் ஷிகர் தவான், இஷ் சோதி ஓவரில் 16 ரன்களில், பராக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

    18:13 (IST)04 May 2019

    ப்ரித்வி ஏவுகணை...

    நடப்பு ஐபிஎல் தொடர், ப்ரித்வி ஷாவுக்கு ஒன்றும் பெரியளவில் க்ளிக் ஆகவில்லை. ஒரு அபார 90+ இன்னிங்ஸுக்கு பிறகு, ஒரு மேட்சில் கூட உருப்படியாக அவர் அடிக்கவில்லை. 

    இன்றாவது அவர் அடிப்பாரா?

    18:01 (IST)04 May 2019

    டெல்லி களத்தில்....

    டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் களத்தில்....

    116 என்பது இந்த டஸ்டி பிட்சில் சேஸிங் செய்யக் கூடிய டார்கெட் தான்.

    17:44 (IST)04 May 2019

    116 ரன்கள் இலக்கு

    ரியான் பராக்கின் 50 ரன்கள் காரணமாக, ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.

    டார்கெட் போதுமா?

    17:43 (IST)04 May 2019

    ரியான் பராக் 50

    வாவ்...வாவ்... இளம் வீரன் ரியான் பராக், போல்ட் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்தார். 

    மிஸ்டர்.போல்ட்... என்ன உங்க ஓவரை நேற்று வந்த சின்னப் பையன்-லாம் அடிக்குறான்.

    17:38 (IST)04 May 2019

    100/8

    19 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 100 ரங்கள எடுத்துள்ளது.

    17:23 (IST)04 May 2019

    என்னாச்சு இஷாந்த் ஷர்மாவுக்கு?

    இஷாந்த் ஷர்மா, இன்று 4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, ராஜஸ்தான் சரிவுக்கு காரணமாக அமைந்தார். 

    17:14 (IST)04 May 2019

    100 ரன்களைக் கடக்குமா?

    ராஜஸ்தான் அணி 15 ஓவர்களில் 70 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    டிரஸ்சு மாத்தியும் இந்த சீசன்ல ஜெயிக்க முடில....

    என்னமோ போடா மாதவா!

    16:58 (IST)04 May 2019

    பின்னி காலி

    முன்னாடிலாம், ஓவருக்கு ஒரு விக்கெட் போய்கிட்டு இருந்துச்சு. இப்போ ஓவருக்கு 2 விக்கெட் போய்க்கிட்டு இருக்கு. ஸ்டூவர்ட் பின்னி முதல் பந்திலேயே அமித் மிஸ்ரா ஓவரில் அவுட்

    16:56 (IST)04 May 2019

    சொல்லி வாயை மூடல...

    நீங்க தான் காப்பாத்தணும்-னு சொல்லி வாயை மூடல.. அதுக்குள்ளே அமித் மிஸ்ரா ஓவரில் ஷ்ரேயாஸ் கோபால் 12 ரன்களில் அவுட்.

    16:52 (IST)04 May 2019

    நீங்க தான் காப்பத்தணும் கோபால்!!

    பவுலிங்கில் ஒவ்வொரு முறையும் சிறப்பாக பந்து வீசி, ராஜஸ்தானுக்கு உதவி வரும் ஷ்ரேயாஸ் கோபாலும், ரியான் பராகும் களத்தில் உள்ளனர். 

    பந்தில் கைக்கொடுக்கும் கோபால், பேட்டிலும் கைக்கொடுப்பாரா?

    140வது அடிங்கப்பா...

    16:43 (IST)04 May 2019

    9 ஓவர்கள் முடிவில்...

    நான்கு விக்கெட்டுகளை இழந்து நாட்டியமாடிக் கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.

    16:29 (IST)04 May 2019

    கதை முடிந்தது

    ராஜஸ்தானுக்கு விளையாட பிடிக்கல போலிருக்கு... ஓவருக்கு ஒரு விக்கெட்டை அந்த அணி இழந்து வருகிறது. லாம்ரோர் எட்டு ரன்களில் இஷாந்த் ஓவரில் கேட்ச் ஆனார்,

    16:27 (IST)04 May 2019

    சாம்சன் அவுட்

    எதிர்பாராதவிதமாக 5 ரன்களில் சஞ்சு சாம்சன் ரன் அவுட் ...

    போச்சா!!

    16:20 (IST)04 May 2019

    தல சுத்துதே... லிவிங்ஸ்டன் அவுட்...

    லியன் லிவிங்க்டன் 14 ரன்களில் இஷாந்த் ஓவரில் போல்டானார்.

    தற்போது புள்ளிப்பட்டியலில் 11 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 6வது இடத்தில் உள்ளது. ரன் ரேட் -0.321. 

    இந்தப் போட்டியில் வெல்வதோடு மட்டுமல்லாமல், மெகா ரன் ரேட் எடுக்க வேண்டும். 

    அப்படி நடந்து ஹைதராபாத், கொல்கத்தா அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் தோற்றால், ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். 

    தல சுத்துதா?

    16:10 (IST)04 May 2019

    ரஹானே அவுட்

    இஷாந்த் ஓவரில் சிக்ஸ் அடிக்க நினைத்த கேப்டன் ரஹானே, நம்ம கப்பர் சிங்கிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார். 

    கேப்டன் ஆயிட்டாலே இந்த மனுஷனுக்கு யாரோ சூனியம் வச்சுடுறாங்க!!

    16:08 (IST)04 May 2019

    அனல் பறக்கும் ஆட்டம்

    மேட்ச் பயங்கரமா இருக்குன்னு நினைச்சுக்காதீங்க!! வெயில் அப்படி கொளுத்துது!! 

    களத்தில் லிவிங்ஸ்டன், ரஹானே

    15:54 (IST)04 May 2019

    ராஜஸ்தான் பேட்டிங்

    தலைநகரில் கொளுத்தும் 40 டிகிரி வெயில், உச்சி மண்டையை பிளக்க, டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே(!?) பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

    யாரை தேடுறீங்க? ஸ்மித்தையா??? அவர் பொட்டிப் படுக்கையெல்லாம் கட்டி ஆஸ்திரேலியா போய் சேர்ந்துட்டாப்ள...

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment