நம்பர்.1 இடத்தில் டெல்லி கேபிடல்ஸ்! ரிஷப் பண்ட் நின்றால் முடியாதது எதுவுமில்ல!

DC vs RR 2019 Match: டெல்லி வெற்றி

Delhi Capitals vs Rajasthan Royals: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.22) இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

IE Tamil commentary

Indian Premier League, 2019Sawai Mansingh Stadium, Jaipur 14 November 2019

Rajasthan Royals 191/6 (20.0)

vs

Delhi Capitals 193/4 (19.2)

Match Ended ( Day - Match 40 ) Delhi Capitals beat Rajasthan Royals by 6 wickets

Live Blog

IPL 2019: DC vs RR

23:36 (IST)22 Apr 2019
டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. ரிஷப் பண்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

23:31 (IST)22 Apr 2019
வெற்றியை நோக்கி டெல்லி

கடைசி ஓவரில் டெல்லி வெற்றிப் பெற 6 ரன்கள் மட்டுமே தேவை...

அப்போ வெற்றி கன்ஃபார்ம் தானே!!

23:21 (IST)22 Apr 2019
ப்ரித்வி அவுட்

சரியான கனெக்ஷன் கிடைக்காமல், தடுமாறி வந்த ப்ரித்வி ஷா, 39 ரன்களில் 42 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.

17 ஓவர்கள் முடிவில், டெல்லி 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள்.

23:01 (IST)22 Apr 2019
இது வேலைக்கு ஆகாது

ராஜஸ்தானின் மோசமான பவுலிங்கை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் டெல்லி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. 

களத்தில் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட்

22:40 (IST)22 Apr 2019
வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டல நீ?

கடந்த போட்டியில் சிறப்பாக ஆடி மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, வந்தவுடனேயே இன்று வெளியேறிவிட்டார். 

நான்கே ரன்களில் பராக் ஓவரில் ஐயர் அவுட்.

22:31 (IST)22 Apr 2019
தவான் அவுட்

27 பந்துகளில் 54 ரன்கள் விளாசிய ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் கோபால் ஓவரில் ஸ்டெம்பிங் ஆனார். ஸ்டிரைக் ரேட் 200.0

ஐ.. இந்தியன் டீமுக்கு ஜாலி.. ஜாலி...

22:25 (IST)22 Apr 2019
டெல்லி பதிலடி தொடக்கம்

192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் டெல்லி கேபிடல்ஸ், 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 23 பந்துகளில் 48 ரன்கள் விளாசி களத்தில் உள்ளார்.

இந்த ஐபிஎல் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே நல்ல விஷயம் ஷிகர் தவான் ஃபார்முக்கு வந்தது தான். 

21:42 (IST)22 Apr 2019
192 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். ஆரம்பத்தில் அடித்த அடிக்கு, 220-ஐ தாண்டியிருக்க வேண்டும். ஆனால், இறுதிக் கட்டத்தில் ரன் ரேட் வெகுவாக குறைய, 191 ரன்களில் திருப்திப்பட்டுக் கொண்டது ராஜஸ்தான்.

21:23 (IST)22 Apr 2019
ரஹானே சென்ச்சுரி

58 பந்துகளில் தனது 2வது ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்தார் ரஹானே. 2012ம் ஆண்டுக்குப் பிறகு 7 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ஐபிஎல்-ல் சதம் அடித்திருக்கிறார். 

21:19 (IST)22 Apr 2019
பென் ஸ்டோக்ஸ் அவுட்

ஹப்பாடா... ஏற்கனவே ஸ்மித்தை ஃபார்முக்கு கொண்டு வந்து, ஆஸ்திரேலியாவுக்கு நல்லது பண்ணியாச்சு. அதுமாதிரி, பென் ஸ்டோக்சையும் கொண்டு வந்திடுவாங்களோ-னு பயந்துட்டேன். நல்லவேளை, ஒரு கான்ஃபிடன்ட் ஷாட்டில் 8 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் அவுட். 

21:03 (IST)22 Apr 2019
ஸ்டீவன் ஃபார்முக்கு வந்தாச்சு!

31 பந்துகளில் ஸ்டீவன் ஸ்மித் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த சீசன் தொடங்கிய போது, மிக மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்த ஸ்மித், இன்றையப் போட்டியில் பழைய பாட்ஷாவாக தெரிந்தார். 

ஆனால், அக்ஷர் படேல் ஓவரில், அதே 50 ரன்களில் சிக்ஸ் லைனில் கேட்ச் ஆனார்.

20:52 (IST)22 Apr 2019
மிரட்டும் ரஹானே - ஸ்மித்

ஸ்மித் - ரஹானே பார்ட்னர்ஷிப் 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் விளாசியுள்ளது. இருவருமே, டெல்லி பவுலர்களுக்கு துளி கூட மதிப்புத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

20:34 (IST)22 Apr 2019
ரஹானே 50

32 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்திருக்கிறார் ரஹானே. 

பார்க்கத்தானே போற, இந்த காளியோட ஆட்டத்த...

20:30 (IST)22 Apr 2019
50 பார்ட்னர்ஷிப்

7 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 1 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே - ஸ்மித் கூட்டணி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகிறது. 

அதிலும், ரஹானே 50-ஐ நோக்கி... 

இட்ஸ் மெடிக்கல் மிராக்கிள்!

20:24 (IST)22 Apr 2019
என்னாச்சு ரஹானேவுக்கு

அக்ஷர் படேல் வீசிய 5வது ஓவரில், ரஹானே கொடுத்த எளிதான கேட்சை இஷாந்த் ஷர்மா கோட்டைவிட, அதற்கு அடுத்த பந்து சிக்ஸ், அடுத்த பந்து பவுண்டரி. அதற்கு அடுத்து ரபாடா வீசிய 6வது ஓவரில் மீண்டும் ரஹானே 1 சிக்ஸ், 1 பவுண்டரி. 

இப்படிலாம் ரஹானே அடிச்சு பல யுகங்கள் ஆச்சு!

20:14 (IST)22 Apr 2019
சஞ்சு அவுட்

ஆட்டம் தொடங்கிய உடனேயே 1 பந்தை கூட எதிர்கொள்ளாத சஞ்சு சாம்சன் 0 ரன்னில் ரபாடாவால் ரன் அவுட் செய்யப்பட, மனுஷனுக்கு மூஞ்சே செத்துப் போச்சு.

19:33 (IST)22 Apr 2019
ராஜஸ்தான் பேட்டிங்

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டெல்லியில் சந்தீப் லமிச்சனே நீக்கப்பட்டு க்ரிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Web Title:

Ipl 2019 dc vs rr live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close