IPL 2019 Schedule: இரண்டு வாரங்களுக்கான அட்டவணை வெளியீடு! ஆரம்பமே தல vs தளபதி!

Indian Premier League 2019 Schedule Announced, Full Time Table: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

Indian Premier League 2019 Schedule Announced, Full Time Table: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2019 Schedule Announced

IPL 2019 Schedule Announced

IPL 2019 Schedule for First Two Weeks Announced: 12வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் இரண்டு வாரத்துக்கான போட்டிகள் குறித்த அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்தாண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் 12வது சீசனை எங்கு நடத்துவது என்ற பெரும் குழப்பம் நிலவியது. தென்னப்பிரிக்காவிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலேயோ ஐபிஎல் தொடரை நடத்தலாம் அல்லது பாதி தொடரை இந்தியாவிலும், பாதியை வெளிநாட்டிலும் நடத்தலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் 23ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கடந்த ஜனவரி 8ம் தேதி அறிவித்தது. ஆனால், போட்டி அட்டவணை வெளியிடப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், தற்போது மார்ச் 23 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையிலான முதல் இரு வாரத்திற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 23ம் தேதி மாலை சென்னையில் தொடங்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

Advertisment
Advertisements

முதல் இரு வாரத்திற்கான அட்டவணை:

மார்ச் 23 - சென்னை vs பெங்களூரு - சென்னை 

மார்ச் 24 - கொல்கத்தா vs ஹைதராபாத் - கொல்கத்தா \ மும்பை vs டெல்லி - மும்பை

மார்ச் 25 - ராஜஸ்தான் vs பஞ்சாப் - ஜெய்ப்பூர்

மார்ச் 26 - டெல்லி vs சென்னை - டெல்லி

மார்ச் 27 - கொல்கத்தா vs பஞ்சாப் - கொல்கத்தா

மார்ச் 28 - பெங்களூரு vs மும்பை - பெங்களூரு

மார்ச் 29 - ஹைதராபாத் vs ராஜஸ்தான் - ஹைதராபாத்

மார்ச் 30 - பஞ்சாப் vs மும்பை - மொஹாலி \ டெல்லி vs கொல்கத்தா - டெல்லி

மார்ச் 31 - ஹைதராபாத் vs பெங்களூரு - ஹைதராபாத் \ சென்னை vs ராஜஸ்தான் - சென்னை

ஏப்ரல் 1 - பஞ்சாப் vs டெல்லி - மொஹாலி

ஏப்ரல் 2 - ராஜஸ்தான் vs பெங்களூரு - ஜெய்ப்பூர்

ஏப்ரல் 3 - மும்பை vs சென்னை - மும்பை

ஏப்ரல் 4 - டெல்லி vs ஹைதராபாத் - டெல்லி

ஏப்ரல் 5 - பெங்களூரு vs கொல்கத்தா - பெங்களூரு

இந்த இரு வார அட்டவணையில் சென்னை அணி நான்கு போட்டிகளில் ஆடுகிறது. அதில் இரு போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

Chennai Super Kings Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: