IPL 2019, KXIP vs MI: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மார்ச்.30) மாலை 4 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதின. இதில், பஞ்சாப் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
Live Blog
KXIP vs MI Live Score
லோகேஷ் ராகுல்... திறமைகள் வாய்ந்த, வாய்த்த ஒரு அருமையான பேட்ஸ்மேன். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் ஏற்ற ஒரு வீரன். ஆனால், அவனது பலவீனம் நம்பிக்கையின்மை. ரொம்ப மொக்கையாக அவுட்டாகும் போது அதை நாம் காண முடியும். இன்றைய போட்டிக்கு முன்பு, முதல் ஆளாய் இறங்கி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இன்றைய போட்டியில் அடிக்கிறாரோ இல்லையோ... உலகக் கோப்பைக்கு உங்களது பெயரும் பரிசீலனையில் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம் ராகுல்.
உங்களை இழக்க டீம் இந்தியா தயாராக இல்லை!
ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் மிரட்டுகிறது. பெங்களூருவுக்கு எதிராக கோலி கண்ணெதிரே பந்துகளை பறக்கவிட்ட ஹர்திக், இன்று பஞ்சாபிலும் தனது வேட்டையை தொடர்ந்துள்ளார்.
19 பந்தில் 31 ரன்கள்
ஒரு இந்திய ரசிகராக, நமக்கு இது மகிழ்ச்சியே!! ஏனெனில், உலகக் கோப்பை நடக்கவிருப்பது இங்கிலாந்து மண்ணில். அங்கு, இதுபோன்று பயமறியா ஒரு ஆக்ரோஷ இன்னிங்ஸ் ஆடக் கூடிய வீரர் தேவை.
ஹர்திக் அந்த இடத்தை முத்தமிட்டு நிரப்புவார் என அவரது இந்த ஃபார்ம் நமக்கு உணர்த்துகிறது.
நம்ம கணிப்பு கண்ணாயிரம் கணிச்சதை விட, 7 ரன்கள் குறைவாக அடித்துள்ளது மும்பை. ஹர்திக் பாண்ட்யாவின் அந்த கடைசி ஷார்ட் சிக்ஸ் ஆகி இருந்தால் 182 அல்லது 183 கூட மும்பை அடித்திருக்க வாய்ப்பிருந்தது. இருந்தாலும், நம்ம கணிப்பு ஒரு 'ஆஹா' சொல்லிவிடுவோம். ஏறக்குறைய துல்லியமாக கணித்ததற்காக!.
மும்பை 176/7
முருகனுக்கு அடித்த அடுத்த யோகம்.... பொதுவா, முருகனால் தானே யோகம் அடிக்கும்!? என்ன உலட்டாவா இருக்கு?
அதாவது, நம்ம முருகன் அஷ்வின் ஓவரில், பஞ்சாப் சிங்கம் யுவராஜ் சிங் 18 ரன்களில் கேட்ச் ஆக, முருகனுக்கு இது 2வது விக்கெட்டாக அமைந்தது.
அப்போ, முருகனால, முருகனுக்கு யோகம் அடிச்சிருக்கு-னு நினைக்குறேன்!!
அண்ணே.. வாங்கண்ணே...
நீ மரியாதை கொடுக்கும் போதே, நான் சொன்னது நடக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்.
ஆமாண்ணே... மும்பை 183 அடிக்கும்-னு சொன்னீங்க... அது போலவே, 9க்கு மேல ரன் ரேட் வச்சி ஆடி வர்றாங்க... அதைத் தாண்டியே அடிப்பாங்க போல.
கணிப்பு-லே.... கண்ணாயிரம்-லே....
டி20 பேட்ஸ்மேன்களில் கேமாக இருந்தாலும், முக்கியமான பவுலர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்ய வேண்டாமா? உலகக் கோப்பைத் தொடருக்காக இந்திய அணி பெரிதும் நம்பியிருக்கும் பவுலர்களில் ஒருவர் முகமது ஷமி. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில், அவரது ஓவரில் அனாயசமாக சிக்ஸர்கள் பறக்கின்றன. இன்று உட்பட...
அதுவும், ஷமியின் ஷார்ட் பிட்ச் பந்தில், எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல் Deep backward square leg-ல் சிக்ஸ் அடிக்கிறார் டி காக்..
ஷமி.... கவனம், கவனம்!!
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், யுவ்ராஜ் சிங் இடம் பெற வாய்ப்புள்ளதா?
'வாய்ப்பே இல்லாத பதிலுக்கு வாய்ப்புள்ளதா என்று கேட்கும் உங்கள் அறிவுக்கு வாய்ப்பே இல்லை' என்று உங்கள் திருவாய் உச்சரிப்பது எனக்கு நன்றாக கேட்கிறது.
'ஐபிஎல் தொடரில் வீரர்களின் பெர்ஃபாமன்ஸ் உலகக் கோப்பைக்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாது' என இந்திய கேப்டன் விராட் கோலி ஏற்கனவே தெரிவித்திருப்பது உங்கள் நினைவுக்காக!!
அபாரமாக ஆடி வந்த ரோஹித் ஷர்மா, வில்ஜோன் பந்தில் 32 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். ரிவியூ கேட்காமல் ரோஹித் சென்ற பின், டிவி அம்பயர் பார்த்த போது, பந்து ஸ்டெம்புகளுக்கு வெளியே சென்றது தெரிய வந்தது. ஸோ. ரோஹித் நாட் அவுட்... பெங்களூரு-க்கு எதிரான மேட்சுல லாஸ்ட் ஓவர் லாஸ்ட் 'நோ-பால்' கர்மா, ரோஹித்தை பழி வாங்கிடுச்சோ!!
ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும், ஆன் லைனில் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஐபிஎல் தொடரை காண முடியும். ஆனால், தமிழ் ராக்கர்ஸிலும் ஐபிஎல் திருட்டுத்தனமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதாக பரவலாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழ் ராக்கர்சின் அனைத்து ஐடியும் தற்போது முடக்கப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.
அண்ணே வாங்கே... என்ன சொல்லப் போறீங்க? எப்படியும், நீங்க ஜெயிக்கும்-னு சொல்ற டீமு தான் தோற்கப் போவுது..
அப்படி-லாம் சொல்லக் கூடாது தம்பி... எப்படியோ, நான் சொல்றதுக்கு எதிர்வினைனு ஒன்னு இருக்குதுல..!?
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... சரி, மும்பை எவ்ளோ அடிப்பாங்க?
மும்பை இன்னைக்கு 183 ரன்கள் அடிக்கும்...
2016ல் நடந்த ஐபிஎல் ஏலத்தில், அடிப்படை விலையான 10 லட்சத்தில் இருந்து 4.5 கோடிகள் கொடுத்து, புனே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் முருகன் அஷ்வின். ஆனால், பெரிதாக ஜொலிக்காத முருகன், இப்போது மீண்டும் பஞ்சாப் அணிக்காக காட்சி தருகிறார்... பிள்ளைய நீ தான் காப்பத்தணும் முருகா!!!
ஹாய், ஹலோ மை டியர் ஐஇ தமிழ் நேயர்களே!! இரு 'கிரீஸ்' சர்ச்சை அணிகளான மும்பையும், பஞ்சாபும் இன்று மாலை உங்கள் கிரிக்கெட் பசியை போக்க காத்திருக்கின்றன.
அஷ்வின் - வாங்கடா... எவனாச்சும், கிரீஸை தாண்டிப் பாருங்கடா... அப்புறம் இருக்கு
ரோஹித் டூ மலிங்கா - பங்காளி... அவன் கிடக்குறான்... நாம கிரீஸை தாண்டிப் போட்டாக் கூட யாரும் கண்டுக்க மாட்டாங்க... நீ கலக்கு பங்காளி...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights