ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பிய தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு!

IPL in Tamil Rockers

IPL in Tamil Rockers

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2019 Live in Tamil Rockers - ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பிய தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு!

IPL 2019 Live in Tamil Rockers - ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பிய தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு!

Tamil Rockers: அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசியில் ஐபிஎல் தொடரிலும் தமிழ் ராக்கர்ஸ் கைவைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

எத்தனை திரைப்படங்கள் வந்தாலும், தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய வில்லனாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ். 'மிஷன் ஷக்தி' ஏவுகணை வீசி, செயற்கைகோள்களைத் தகர்க்கும் நம்மால், தமிழ் ராக்கர்ஸ் தளத்தை யார், எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.

மும்பை vs பெங்களூரு போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் காண இங்கே க்ளிக் செய்யவும்

தமிழ் சினிமா இதனால், சின்னாபின்னமாகிக் கொண்டிருக்க, சத்தம் போடாமல் ஐபிஎல் தொடரையும் தமிழ் ராக்கர்ஸ் ஒளிபரப்பை வருவதாக கிடைத்த தகவல் நமக்கே பகீரென்று இருந்தது.

Advertisment
Advertisements

தமிழ் ராக்கர்சில் இதற்கென்றே பிரத்யேக லிங்க் கொடுக்கப்பட்டு, அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டை லைவ் செய்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்வுகளை, தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத் தனமாக வெளியிடுவதாக தெரிய வருகிறது.

சேனல்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும், ஆன் லைனில் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஐபிஎல் தொடரை காண முடியும். அப்படி, தமிழ் ராக்கர்ஸிலும் ஐபிஎல் ஒளிபரப்பாகும் பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், தமிழ் ராக்கர்சின் அனைத்து ஐடியும் தற்போது முடக்கப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.

Ipl Tamil Rockers

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: