இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்! தனி ஒருவனாக வெற்றியை உறுதி செய்த சூர்யகுமார் யாதவ்!

IPL MI vs CSK: மும்பை வெற்றி

By: May 7, 2019, 11:17:03 PM

IPL 2019 MI vs CSK: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.7) இரவு 7.30 மணிக்கு சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

மேலும் படிக்க – ‘கிரிக்கெட் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா போச்சா?’ – தமிழ்நாடு வெதர்மேன் ஆதங்கம்

IE Tamil commentary

Indian Premier League, 2019MA Chidambaram Stadium, Chennai 09 August 2020

Mumbai Indians 132/4 (18.3)

vs

Chennai Super Kings 131/4 (20.0)

Match Ended ( Day - Qualifier 1 ) Mumbai Indians beat Chennai Super Kings by 6 wickets

Live Blog
IPL 2019: MI vs CSK
23:06 (IST)07 May 2019
இறுதிப் போட்டியில் மும்பை

இந்த சீசனில் மட்டும் மூன்று முறை மும்பையிடம் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ், அனைத்திலும் தோற்றிருக்கிறது. குவாலிஃபயரில் பெற்ற வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சென்னை சூப்பர் கிங்ஸ், எலிமினேட்டர் பிரிவில் வெற்றிப் பெறும் அணியுடன் அடுத்து மோத வேண்டும்.

23:00 (IST)07 May 2019
மும்பை வெற்றி

மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. 18.3வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ரன்கள் எடுத்து வென்றது.

22:54 (IST)07 May 2019
வெற்றிக்கு அருகில்...

17 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 125/4...

அவ்ளோ தான்... எல்லாம் கெளம்பு, கெளம்பு

22:38 (IST)07 May 2019
சூர்யகுமார் 50

இந்தியாவின் டி வில்லியர்ஸ் சூர்யகுமார் யாதவ், 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்திருக்கிறார். 

இருப்பினும், காலம் போன காலத்தில் 28 ரன்களில் இஷான் கிஷன் இம்ரான் தாஹிர் ஓவரில் போல்டானார்.

22:30 (IST)07 May 2019
வெற்றியை நோக்கி மும்பை...

ரன் ரேட் 6க்கும் கீழ் சென்றுவிட்டது. இரண்டு பேட்ஸ்மேன்கள் நன்றாக செட்டாகி விட்டனர். இனி, மும்பையை வீழ்த்துவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று.

22:22 (IST)07 May 2019
பலசாலிகள் மட்டுமல்ல புத்திசாலிகளும் கூட...

பவர்பிளே முடிந்த பிறகு, மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் சூர்யகுமார் யாதவ்வும், இஷான் கிஷனும் ஒரு பந்தை கூட தூக்கி அடிக்கவில்லை. 

அனைத்தும் தரை வழி மார்க்கமாகவே சென்றுக் கொண்டிருக்கிறது. அவசரப்படத் தேவையில்லை என்பதில் மிகத் தெளிவாக உள்ளனர்.

22:04 (IST)07 May 2019
அட போங்க பஜ்ஜி...

6வது ஓவரை வீசிய ஹர்பஜன் பந்துகளை பவுண்டரி, சிக்ஸ் என அமர்க்கப்படுத்தி விட்டார் இஷான் கிஷன். 

பஜ்ஜி பா... நீங்களே இப்படி பண்ணா எப்படி!!

21:54 (IST)07 May 2019
டி காக் அவுட்

ஹர்பஜன் ஓவரில் டி காக் 8 ரன்களில் லாங் ஆஃப்-ல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கொஞ்சம் அவசரப்பட்டு அடிக்கப் போக, டு பிளசிஸ் கைகளில் பந்து சிக்கியது.

21:46 (IST)07 May 2019
இது போதாது சிஎஸ்கே

மும்பை இந்தியன்ஸ் 7க்கும் மேல் ரன் ரேட் வைத்து ஆடி வருகிறது. 132 ரன் டார்கெட்டுக்கு இதுலாம் போதாது சிஎஸ்கே...இந்நேரம் 2 விக்கெட்டாவது கைப்பற்றி இருக்கணும்.

21:36 (IST)07 May 2019
மும்பை களத்தில்....

132 ரன்கள் எனும் இலக்கை நோக்கிய மும்பைக்கு முதல் பந்தே பவுண்டரி.. நோக்கியோ!! ஆனால், இரண்டாவது பதில் ரோஹித் எல்பிடபிள்யூ ஆக, அதிர்கிறது சேப்பாக் ஸ்டேடியம்.

21:28 (IST)07 May 2019
வெற்றி பெறப் போவது யார்?

132 ரன்கள் இலக்கு என்பது இந்த பிட்சை பொறுத்தவரை, லைட்டான டஃப் ஸ்கோர் எனலாம். இருப்பினும், மும்பை ஹிட்டர்ஸ், இதனை எளிதாக கடந்துவிடுவார்கள் என்பதால்,

மும்பை - 80%

சென்னை - 20%

வெற்றிப் பெற வாய்ப்பு உள்ளது.

21:17 (IST)07 May 2019
132 ரன்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.

21:07 (IST)07 May 2019
இட்ஸ் மஹி வே...

19வது ஓவரை வீசிய மலிங்காவின் பந்துகளில் இரண்டை சிக்ஸருக்கு தூக்கி அசத்தினார் கேப்டன் மகேந்திர சிங் தோனி...

21:00 (IST)07 May 2019
தல-யே தடுமாறுதே!!

தோனியே அதிரடியாக ஆட முடியாமல் தடுமாறி வருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஒரு பிட்ச் இது.

20:49 (IST)07 May 2019
96-4

16 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

தோனி, ராயுடு களத்தில்...

20:40 (IST)07 May 2019
தோனி சிக்ஸ்...

சென்னை அணியின் முதல் சிக்ஸ் இது... ஜெயந்த் யாதவ் ஓவரில், தோனி ஒரு ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் அடிக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ராயுடு டீப் மிட் விக்கெட்டில் மற்றொரு சிக்ஸ்...

20:32 (IST)07 May 2019
முரளி விஜய் அவுட்

வெல் செட்டில்ட் பேட்ஸ்மேன் முரளி விஜய், ராகுல் சாஹர் ஓவரில் 26 ரன்களில் ஸ்டெம்பிங் ஆனார். 

தோனி இன்...

20:19 (IST)07 May 2019
ஏதோ வண்டி ஓடுது!!

32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பிறகு, முரளி விஜய்யும், அம்பதி ராயுடுவும் ஓரளவுக்கு இழுத்துப் பிடித்து ஆடி வருகின்றனர். ஒரு 15 ஓவர் வரை விக்கெட் இழக்காமல் சென்றால், சிஎஸ்கே 130 ரன்களை தாண்ட வாய்ப்பிருக்கிறது.

20:10 (IST)07 May 2019
46-3

9 ஓவர்கள் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் 46-3

130 அடிக்குமா??

20:07 (IST)07 May 2019
இப்படி ஒரு மட்டமான சாதனையா!!

இந்த சீசனில் பவர்பிளேயில் 11வது முறையாக வாட்சன் அவுட்டாகி, எந்த பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

தவிர, நடப்பு ஐபிஎல் தொடரில் பவர்பிளேயில் 29 விக்கெட்டுகள் இழந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது.

19:59 (IST)07 May 2019
32-3

வாட்சன் 10 ரன்களில், க்ருனால் பாண்ட்யா ஓவரில் அவுட்டாக, சென்னை சூப்பர் கிங்ஸ் 6 ஓவர்கள் முடிவில் 32-3.

வெளங்கிடும்...

19:54 (IST)07 May 2019
140 அடித்தால் சாதனை...

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ள நிலைமைக்கு 140 ரன்கள் அடித்தாலே, அது மகத்தான விஷயம் தான். 140-150 அடித்துவிட்டாலே மும்பையை ஓரளவுக்கு டஃப் கொடுக்க முயற்சிக்கலாம்.

19:47 (IST)07 May 2019
ரெய்னா அவுட்

'சின்ன தல' என்று அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, 5 ரன்களில், ஜெயந்த் யாதவ் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, சிஎஸ்கே ஃபேன்ஸ் பின் டிராப் சைலன்ஸ்...

19:40 (IST)07 May 2019
டு பிளசிஸ் அவுட்

அடக் கிரகமே!! ராகுல் சாஹரின் மிக மிக சாதாரண ஒரு பந்தில் டு பிளசிஸ் படு மொக்கையான ஏர் ஷாட் ஒன்று அடிக்க, 11 பந்துகளில் 6 ரன்களில் அவுட்..

19:35 (IST)07 May 2019
'சிங்'கிள் இஸ் கிங்...

மலிங்கா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் டு பிளசிஸ் ஒரு சிங்கிள் எடுக்க, அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.

சிங்கிள் டூ சிக்சஸ்....

19:29 (IST)07 May 2019
டு பிளசிஸ், வாட்சன் களத்தில்

முரளி விஜய்யை ஓப்பனிங் இறக்கி விடுவாங்கன்னு பார்த்தா, டு பிளசிஸ்-ஐ இறக்கி விட்டு இருக்காரு தோனி... தல உங்க ஸ்டிராடஜியே புரியல போங்க...

19:19 (IST)07 May 2019
சேப்பாக்கில் மும்பை vs சென்னை 2012லிருந்து....

எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி, 2012
ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி, 2013
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி, 2015
46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2019

19:15 (IST)07 May 2019
மும்பை பிளேயிங் XI

குயிண்டன் டி காக்(w), ரோஹித் ஷர்மா(c), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா

19:08 (IST)07 May 2019
சிஎஸ்கே பிளேயிங் XI

ஷேன் வாட்சன், முரளி விஜய், பாப் டு பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி(w/c), அம்பதி ராயுடு, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்

19:02 (IST)07 May 2019
சென்னை பேட்டிங்

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

19:00 (IST)07 May 2019
பலசாலி மும்பை

மனசாட்சிப் படி சொல்ல வேண்டுமெனில், சென்னையை கம்பேர் செய்கையில் மும்பை வலிமையான அணியே. அதனை மீறி தோனி என்ன செய்யப் போகிறார் என்பதே கேள்வி.

18:57 (IST)07 May 2019
7 மணிக்கு டாஸ்...

வழக்கமாக 7.30 மணிக்கு போடப்படும் டாஸ், இன்றைய குவாலிஃபயர் ஆட்டத்தில் 7 மணிக்கு போடப்படும். 

அப்புறம் என்ன, மத்த வேலை வெட்டியை தூக்கி தூரப்போடுங்க...

18:48 (IST)07 May 2019
வணக்கம் தோனியன்ஸ்களே!!

இன்றைய மேட்ச் இரவு 7.30 மணிக்கு என்பதை மறந்துவிட வேண்டாம். நீங்க பாட்டுக்கு வழக்கம் போல 8 மணிக்கு டிவியை ஆன் பண்ணாதீங்க!! 5 ஓவர் முடிஞ்சிருக்கும்...

லீக் போட்டியில் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்று சென்னையை மிக எளிதாக வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Title:Ipl 2019 mi vs csk live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X