IPL 2019, Qualifier 1 Preview : ஐ.பி.எல் தர வரிசைப் பட்டியலில் இருக்கும் இரண்டு முதல் டீம்கள் நேரடியாக குவாலிஃபையரில் இறங்குவதால் ஏக குஷியில் இருக்கின்றார்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள். இன்று வெற்றி வாகை சூடும் அணியினர் நேரடியாக ஃபைனல்ஸ்க்கு சென்று விடுவார்கள்.
தோனியின் தலைமையில் இருக்கும் சிறந்த வீரர்களின் வெளிப்பாட்டினை இந்த மேட்சிலும் நாம் எதிர்பார்க்கலாம். அதே போன்று சிறப்பான ஃபார்மில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியினரும் இருக்கின்றார்கள். கடைசி மேட்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீட்டிற்கு அனுப்பிய உத்வேகத்தில் அவர்கள் இன்று களம் இறங்குகிறார்கள்.
இதுவரையில் சென்னை அணியும் மும்பை அணியும் தலா மூன்று முறை சாம்பியன்ஷிப் அடித்துள்ளனர். ஆனாலும், மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இது வரையில் சென்னை அணியினரை சென்னையிலேயே வீழ்த்தி சாதனை புரிந்தவர்கள்.
மேலும் படிக்க :சென்னை சூப்பர் கிங்ஸுக்கே எமனாகிப் போன சேப்பாக் பிட்ச்! மும்பை மெகா வெற்றி!
குவாலிஃபையர் மேட்சில் இதுவரை சென்னை மண்ணின் பெருமையை காப்பாற்றியது சென்னை அணி. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 7 மேட்ச்களில் ஒரே ஒரு மேட்சில் மட்டும் தான் தோல்வியை தழுவியது சென்னை அணி. அதுவும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன்.
பட்டையைக் கிளப்பும் தல தோனி
தற்போதும் சென்னை அணியின் முதுகெலும்பாக இருப்பது கேப்டன் கூல் தான். பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 139.92 ஆகும். இந்த சீசனில் நடைபெற்ற 9 மேட்ச்களில் 368 ரன்கள் விளாசியுள்ளார் தோனி. இம்முறை சென்னை அணியினர், ஜஸ்ப்ரித் பும்ப்ரா, மலிங்கா, ராகுல் சஹர், மற்றும் பாண்டியா சகோதர்களின் வலுவான பந்துவீச்சினை சமாளிக்க வேண்டியது இருக்கும்.
ஃபுல் ஃபார்மில் இருக்கிறதா சென்னை அணி ?
இந்த மேட்சில் கேதர் ஜாதவ் இல்லாமல் இருப்பது தற்போது மிகப் பெரிய குறையாக இருக்கிறது சென்னை அணிக்கு. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார் கேதர் ஜாதவ். தென்னாப்பிரிக்க ப்ளேயரான பராசக்தி எக்ஸ்பிரஸ் “இம்ரான் தாஹிர்” அணிக்கு பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளே ஆஃப்களில் இதற்கு முன்பு இரண்டு முறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியுள்ளன. இரண்டிலும் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. மொத்த ஐபிஎல் வரலாற்றிலும் 28 மேட்ச்களில் 12 மேட்ச் சென்னை அணியினரும், 16 மேட்ச் மும்பை அணியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் எடுக்க முடியாது என்றாலும், கடினமான இலக்கினை எதிர் அணியினருக்கு தர இயலும். ஸ்பின்னர்களுக்காகவும், இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்யும் அணிக்காகவும் வார்த்தெடுக்கப்பட்டது சென்னை சேப்பாக்கம் மைதானம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.