Royal Challengers Bangalore vs Kings XI Punjab: ஐபிஎல் தொடரில், இன்று (ஏப்.24) இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
Web Title:Ipl 2019 rcb vs kxip live cricket score updates
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து தோற்றது. பெங்களூருவின் தொடர் வெற்றி தொடர்கிறது.
28 பந்துகளில் 46 ரன்கள் விளாசிய பஞ்சாபின் லாஸ்ட் ஹோப் பூரன் சைனி ஓவரில் அவுட்டாக, பஞ்சாபின் நம்பிக்கை சிதைந்தது.
பஞ்சாப் அணி கடைசி இரு ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி. ஆனால், 18.1வது ஓவரில் 24 ரன்களில் டேவிட் மில்லர் அவுட்!
மில்லர் - பூரன் பார்ட்னர்ஷிப் 60 ரன்களைக் கடந்து பறந்து கொண்டிருக்கிறது. அனைத்து ஓவர்களும் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெற்றியை நெருங்குவது போல் பஞ்சாப்.
இந்த சீசன்-ல இப்போ தான் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் வீசிய 14வது ஓவரில். ஒரு மேட்சில் கூட அடிக்காத நிக்கோலஸ் பூரன் 3 சிக்ஸர்களை பறக்கவிட, சுந்தர் ஏகத்துக்கும் அப்செட்.
பஞ்சாப் அணியின் கடைசி நம்பிக்கையாக விளங்கிய லோகேஷ் ராகுல், மொயீன் அலியின் முதல் ஓவரிலேயே 42 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இரண்டு செட் பேட்ஸ்மேன்களான மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் வெளியேறி இருக்கின்றனர்.
இனி பிழைப்பது கடினம்!
லோகேஷ் ராகுலுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தலாக ஆடிய உள்ளூர் பையன் மாயங்க் அகர்வால், 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
க்ரிஸ் கெயில், 23 ரன்களில் உமேஷ் யாதவ் ஓவரில் ஸ்ட்ரெய்ட்டில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, பஞ்சாப் கேலரியில் நிசப்தம்!
பஞ்சாப் ஓப்பனர்கள் களத்தில்...
லோகேஷ் ராகுல், க்ரிஸ் கெயில் என்ன செய்யப் போகிறார்கள்?
1 4 6 Wd Wd 1 . 2 | B1 B1 6 6 6 L1 | 6 1 4 6 4 6
அடக் கொடூரமே! வில்ஜோன் வீசிய கடைசி ஓவரில் 27 ரன்கள் விளாசப்பட அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. இதில், கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் மட்டும் 20 ரன்கள்.
ஸ்டாய்னிஸ் - 6
ஸ்டாய்னிஸ் - 4
ஸ்டாய்னிஸ் - சிக்ஸ்
ஸ்டாய்னிஸ் - 4
டி வில்லியர்ஸ் - 1
டி வில்லியர்ஸ் - சிக்ஸ்
35 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் டி வில்லியர்ஸ். அதுமட்டுமின்றி, ஷமி வீசிய 19வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாச, அதிர்ந்தது பெங்களூரு.
அதிலும் ஹாட்ரிக் சிக்ஸ் பந்து அவுட் ஆஃப் தி ஸ்டேடியம்.
இன்றைய போட்டியில், பஞ்சாப் அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின், முருகன் அஷ்வின் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக பந்து வீசினர்.
முருகன் - 4-31-1
ரவிச்சந்திரன் - 4-15-1
14 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு 109 ரன்கள் எடுத்துள்ளது.
களத்தில் டி வில்லியர்ஸ், ஸ்டாய்னிஸ்...
பெங்களூரு டீமுல அக்ஷ்தீப் நாத்-னு ஒருத்தர் இருக்கார். பேட்ஸ்மேன்னு சொல்றாங்க? ஆனால், அவருடைய ரோல் என்னவென்பது இதுவரை தெரியவில்லை. இன்றையப் போட்டியிலும் தெரியவில்லை.
3 ரன்களில் வில்ஜோன் பந்தில் அவுட்
கேப்டன் அஷ்வின் தனது முதல் ஓவரிலேயே, டேஞ்சரஸ் மொயின் அலியை 4 ரன்களில் போல்டாக்கினார். ஸ்லிப் கொண்டு வந்து நிறுத்தி பந்தை திருப்பாமல் நேராக ஸ்டம்ப்பை நோக்கி விட்டு அவுட்டாக்கினார். இது மாஸ்டர் பிளான் தான்.
செம காண்டுல இருந்த அஷ்வினுக்கு சிறு ஆறுதல்!
தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரிந்தும் சிறப்பாக ஆடி வந்த பார்த்திவ் படேல், முருகன் அஷ்வின் ஓவரில் 43 ரன்களில் கேப்டன் அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முகமது ஷமி ஓவரில் 13 ரன்களில் விராட் கோலி கேட்ச் ஆனார். முன்னதாக, ஷமி ஓவரில் கோலிக்கு கேட்ச் விடப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பை பயன்படுத்தாத கோலி, மீண்டும் ஷமி ஓவரிலேயே கேட்ச் ஆகியுள்ளார்.
சென்னையை கடந்த போட்டியில் ரன் அவுட் செய்து தோற்கடித்ததாலோ என்னவோ, பார்த்திவ் படேல் இன்று களமிறங்கிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தியுள்ளார்.
எதிர்முனையில் யார் தெரியுமா?
'கிங்' கோலி
பார்த்திவ் படேல்(w), விராட் கோலி, டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அக்ஷ்தீப் நாத், மொயீன் அலி, வாஷிங்டன் சுந்தர், டிம் சவுதி, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல்.
தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு இந்த சீசனில் முதன்முதலாக இப்போட்டியில் தான் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஷ்வின், பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
கெயில் vs டி வில்லியர்ஸ்....
இருக்கு... இன்னைக்கு எங்கோ ஒரு சம்பவம் இருக்கு...