Mumbai Indians vs Royal Challengers: ஐபிஎல் 2019 தொடரில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில், மும்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.
Live Blog
Live IPL 2019 Match 7: MI vs RCB Live Score Updates
தோல்வி குறித்து பேட்டியளித்த பெங்களூரு கேப்டன் கோலி, "நாம் ஐபிஎல் லெவல் கிரிக்கெட்டில் ஆடி வருகிறோம். இங்கு அம்பயர்கள் கண்களை திறந்து வைத்திருந்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய நோ பாலை எப்படி அம்பயர்கள் கவனிக்காமல் விட்டார்கள் என தெரியவில்லை" என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்,
கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. லசித் மலிங்கா வீசிய அந்த ஓவரில், கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முடியாமல் போக, 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றது. ஆனால், பிறகு தான் தெரிந்தது கடைசி பந்து நோ-பால் என்று.... அதுவும் மலிங்கா வீசியது மிகப்பெரிய நோ-பால். அம்பயர்கள் அதை கவனித்து இருந்ததால், முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம்.
மொயின் அலி விக்கெட் விழுந்த அதே பும்ரா ஓவரில் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க, சின்னசாமி ஸ்டேடியம் பெரிதாய் அதிர்ந்தது. ஐபிஎல் புரமோ வீடியோவில், கோலியை 'சீக்கு' என பும்ரா கிண்டல் செய்ய, 'என்னயவா கிண்டல் பண்ற?'... 'உனக்கு நான் தயவு காட்ட மாட்டேன்' என கோலி சொன்னது இப்போ நினைவுக்கு வருது!
யோவ் கணிப்பு கண்ணாயிரம்... பரவாயில்லையா... மும்பை 195-8 அடிக்கும்-னு Predict சொன்ன... 187-8 வந்திருக்கு... நீ அடிச்சுவிட்டது ஓரளவுக்கு மேட்ச் ஆகிடுச்சுயா...
கணிப்பு பலிக்குல-னா திட்டுறது, பலிச்சா அடிச்சுவிட்டது-னு சொல்றது... போப்பா...
கோச்சிக்காத கணிப்பு... கையக் குடு முதல்ல...
சாஹல் வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விலாசியா, நான்காவது சிக்ஸர் அடிக்க முயலும் போது சிக்ஸ் லைனில் சிராஜால் கேட்ச் செய்யப்பட்டார். நான்காவது பந்து பறந்து கொண்டிருந்த போது, ஒவ்வொரு 90-ஸ் கிட்ஸுக்கும் 2007ல் பிராட் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த யுவராஜ் தான் கண் முன்னே வந்தார்.
மும்பைக்காக தற்போது களமிறங்கி இருக்கும் சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பல காலம் ஆடியவர். அவரிடம் இல்லாத ஷாட்களே இல்லை. வெரைட்டி காட்டி அசரடிப்பார் மனுஷன். இந்தியாவின் குட்டி டி வில்லியர்ஸ் என்று கூட அவரை சொல்லலாம். ஆனால், விதி அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. உத்தப்பாவின் வாழ்க்கையிலாவது இந்திய அணியில் ஆடிய பிறகு, விதி அவர் வாழ்க்கையில் ஆடியது. இவரது கேஸில், ம்ஹூம்!!.
அன்று 2009...
ஐபிஎல்-ல் ரோஹித் ஷர்மா எப்போது பிரபலம் அடைந்தார் தெரியுமா? 2009... டெக்கான் சார்ஜர்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 161 ரன்கள் டார்கெட்டை துரத்தி ஆடிக் கொண்டிருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை... பந்து வீசுவது மஷ்ரஃபே மோர்டசா... அந்த ஓவரில், N4 L1 1 6 Wd 2 4 6 என்று தனி ஆளாக ரோஹித் பொளந்து கட்ட த்ரில் வெற்றிப் பெற்றது டெக்கான்.
போட்டி முடிந்த பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டன் கில்கிறிஸ்ட் சொன்ன வார்த்தைகள் இவை... "வருங்காலத்தில் இந்த இளைஞன் இந்திய அணியின் மிகப்பெரிய வீரராக உருவாகி நிற்பான்"
இன்று 2019...
3 முறை சாம்பியன் கப் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித்
வாங்கோ.... வாங்கோ Mr.கணிப்பு.. அப்புறம் ஊருல மழை பெய்யுதா? குளம், குட்டையில தண்ணி கிடக்குதா?
மண்டைய வெயில் பொளந்துக்கிட்டு இருக்கு... மழை பெய்யுதா-வாம்?
கோச்சிக்காதீங்க கணிப்பு... அப்புறம், என்ன இந்த பக்கம்... ஓ... Prediction சொல்ல வந்தீரோ..? சொல்லுமய்யா..
இன்னைக்கு, பெங்களூரு தான் ஜெயிக்கும். பாரு...
ஓகே கணிப்பு... நீங்க சொல்லிட்டீங்க-ல.... கதை முடிஞ்சா மாதிரி தான்...
யாரு கதை?
பார்க்கத் தானே போறீரு!!
தமிழ் ராக்கர்ஸில் ஐபிஎல் 2019 தொடர் சட்டத்திற்கு புறம்பாக ஒளிபரப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த முழு தகவலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் முரட்டுத் தனமாக அடி வாங்கியது. அதிலும், ரிஷப் பண்ட்டிடம் சிக்கி சின்னாபின்னமானார்கள் மும்பை பவுலர்கள். அவர்களிடம் பிரச்சனை என்று பெரிதாக ஒன்றுமில்லை. தொடக்கத்தில் ரோஹித் சிறப்பாக ஆடினால், மற்றவை எல்லாம் தானாகவே சரியாகிவிடும்.
பெங்களூரை பொறுத்தவரை அவங்ககிட்ட என்ன பிரச்சனை-னு அவங்களுக்கும் தெரியல... நமக்கும் தெரியல... ஆனா, ஒன்னு புரியுது.. ஒவ்வொரு முறையும், இதுதான் எங்களது சிறந்த Balanced டீம்-னு விராட் சொல்லி, அவரே அவரை ஏமாத்திக்குறார்.... அவங்க டீம் பேலன்ஸ்ட்-ஆக இல்லை என்பதே உண்மை. பேட்டிங்கை நம்பி மட்டுமே இயங்கி வருகிறது. நமக்கு தெரிந்த வரையில், தோல்விக்கு அதுவே காரணம். மற்றபடி, விராட்டின் கேப்டன்ஷிப்பை குறை சொல்வது பேத்தல்....
ஹாய், ஹலோ, வணக்கம்.... இன்னைக்கு ஒரு செம மேட்ச் நமக்காக காத்திருக்கிறது. தளபதி விராட் கோலியும், ஹிட்மேன் ரோஹித் ஷர்மாவும் நேருக்கு நேர் மோதப் போகிறார்கள். மேட்ச் பற்றிய உடனுக்குடன் அப்டேட், ஸ்கோர்போர்ட் மற்றும் சுவாரஸ்ய தகவல்களுடன் உங்களுக்காக ஐஇ தமிழ் வழங்கும் பிரத்யேக கிரிக்கெட் லைவ் இதோ! அப்புறம், நம்ம கணிப்பு கண்ணாயிரமும் Prediction சொல்ல காத்திருக்கிறார். தப்பா சொன்னா, மூஞ்சுலயே குத்துவோம்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights