இப்படியொரு கொடூர தோல்வியை கோலி எதிர்பார்த்திருக்க மாட்டார்! போதும்…. நிறுத்திக்கலாம்!

Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad RCB vs SRH: ஹைதராபாத் வெற்றி

RCB vs SRH

IPL 2019, RCB vs SRH: ஐபிஎல் 2019 தொடரில், இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில், ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

 

IE Tamil commentary

Indian Premier League, 2019Rajiv Gandhi International Stadium, Hyderabad 20 February 2020

Sunrisers Hyderabad 231/2 (20.0)

vs

Royal Challengers Bangalore 113 (19.5)

Match Ended ( Day - Match 11 ) Sunrisers Hyderabad beat Royal Challengers Bangalore by 118 runs

Live Blog

RCB vs SRH

19:33 (IST)31 Mar 2019
113 ரன்களுக்கு ஆல் அவுட்!

போதும்..இத்தோட நிறுத்திக்கலாம்... உங்களை நம்பி நம்பி, எங்கள் எல்லோரது இதயத்தையும் கொடுத்துவிட்டோம். இனி கொடுக்க இதயமில்லை - ஆர்சிபி ரசிகன்

பெங்களூரு அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட். இதன் மூலம், 118 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மெகா வெற்றிப் பெற்றது.

19:25 (IST)31 Mar 2019
கிராண்ட்ஹோம் அவுட்

37 ரன்களில் கோலின் டி கிராண்ட்ஹோம் ரன் அவுட். அட போங்கப்பா... கடுப்பா வருது!

19:20 (IST)31 Mar 2019
உமேஷ் யாதவ் ரன் அவுட்!

14 ரன்களில் உமேஷ் யாதவ், ரஷித் கான்னால் ரன் அவுட் செய்யப்பட, பெங்களூரு 104-8

19:04 (IST)31 Mar 2019
விக்கெட்!

சந்தீப் ஷர்மா ஓவரில், பிரயாஸ் பர்மன் 19 ரன்களில் கேட்ச் ஆனார். பெங்களூரின் 7வது விக்கெட்

18:56 (IST)31 Mar 2019
81/6

14 ஓவர்கள் முடிவில், பெங்களூரு 6 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. 

18:45 (IST)31 Mar 2019
கணிப்பு கண்ணாயிரம்

அண்ணே... என்ன இப்படி ஆயிடுச்சு!?

பெங்களூரு அவ்ளோ தான் தம்பி... மென்டலா அந்த அணி தோற்றுப் போய் விட்டது. இந்த மேட்சிலும் சரி, ஐபிஎல்-லிலும் சரி... 

இதுக்கு வேற வழியே இல்லையா?

விராட் கோலிய வேற டீம் வாங்கினா போதும்... எல்லாம் அதுவே சரியாகிடும்.

18:42 (IST)31 Mar 2019
சன் ரைசர்ஸின் சிறந்த பவுலிங்

5/19 புவனேஷ் குமார் v பஞ்சாப், ஹைதராபாத், 20174/11 முகமது நபி - இன்று4/14 புவனேஷ் குமார் v ராஜஸ்தான், அகமதாபாத், 20144/19 அமித் மிஸ்ரா v பபுனே வாரியர்ஸ் இந்தியா, புனே, 2013

18:36 (IST)31 Mar 2019
பரிதாப பெங்களூர்!

இந்த பெங்களூரு டீமை வேற யாருக்காவது விற்று, ஷேப்பை மாத்துங்கய்யா... விராட் கோலி, டி வில்லியர்ஸ் என்கிற பெயர்களுக்காக, எவ்ளோ தான் அடி வாங்குறது! ஆர்சிபி ஃபேன்ஸ்-ஐ நினைச்சா நமக்கே பரிதாபமாக உள்ளது. 

18:34 (IST)31 Mar 2019
ஷிவம் துபே அவுட்!

ஹான்..ஹான்... கெளம்பு, கெளம்பு.. எல்லாம் இடத்த காலி பண்ணு!

18:25 (IST)31 Mar 2019
மொயீன் அலி அவுட்!

சந்தீப் ஷர்மா ஓவரில், மொயீன் அலி 2 ரன்களில், ரன் அவுட்டாக, தனது ஐந்தாவது விக்கெட்டை இழந்து, மிக மோசமான தோல்வியை எதிர்நோக்கியுள்ளது பெங்களூரு.

18:18 (IST)31 Mar 2019
அடுத்த மேட்ச் யாருக்கு தெரியுமா?

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை நிலைமை இன்னைக்கு என்ன ஆகப் போகுதோ!!

18:11 (IST)31 Mar 2019
டி வில்லியர்ஸ் போல்ட்

அடக்கடவுளே!! இதை என்னன்னு சொல்லுறது... நபி-க்கு மூன்றாவது விக்கெட். டி வில்லியர்ஸ் 1 ரன்னில் போல்ட்... தனிமையில் விராட் கோலி

18:08 (IST)31 Mar 2019
யோவ்.. என்னய்யா நீ?

முகமது நபி ஓவரில் இறங்கி வந்து சிக்ஸ் அடிக்க முயன்ற ஹெட்மயர் 9 ரன்களில் மிக அழகாக ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். மூணு மேட்ச் ஆகிடுச்சு. இதுவரைக்கு ஒன்னும் செய்யல....

18:02 (IST)31 Mar 2019
பார்த்திவ் அவுட்

பார்த்திவ் படேல் 11 ரன்களில் முகமது நபி ஓவரில் கேட்ச் ஆக, பெங்களூரு முதல் விக்கெட்டை இழந்தது. அவர் அவுட்டானதும் நல்லது தான்! ஏன்னு இப்போ உங்களுக்கு புரியாது. மேட்ச் முடியும் போது புரியும்.

17:40 (IST)31 Mar 2019
232 ரன்கள் இலக்கு

20 ஓவர்கள் முடிவில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் விளாசியுள்ளது.

17:37 (IST)31 Mar 2019
வார்னர் சதம்

54 பந்துகளில் சதம் விளாசினார் டேவிட் வார்னர்.

காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை, ரொம்ப சூடா இருக்கும் போல...

17:30 (IST)31 Mar 2019
Mr.ஹெட்மயர்... காதில் விழுந்துச்சா?

200 ரன்களைக் கடந்தது சன் ரைசர்ஸ்... கோலி, டி வில்லியர்ஸ் மட்டும் இதை திருப்பி அடிக்க முடியாது. Mr.ஹெட்மயர்... நீங்களும் அடிச்சா தான் சேஸ் செய்ய முடியும்... காதில் விழுந்துச்சா?

17:25 (IST)31 Mar 2019
என்னமா வளர்ந்துட்டான் இந்த பையன்!

விஜய் ஷங்கர் தான் களமிறங்கிய முதல் பந்திலேயே, சாஹல் ஓவரில் ஸ்ட்ரெயட்டில் சிக்ஸ் அடித்து அசத்தினார். ஆனால், அதிக ஆர்வக் கோளாறால், 9 ரன்களில் ரன் அவுட்டாக, 2வது விக்கெட்டை இழந்தது சன் ரைசர்ஸ். 

17:18 (IST)31 Mar 2019
புயல் ஓய்ந்தது

ஜானி பேர்ஸ்டோ 56 பந்துகளில் 114 ரன்கள் விளாசி, சாஹல் ஓவரில் கேட்ச் ஆனார். இதில் 12 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும்.

17:12 (IST)31 Mar 2019
பேர்ஸ்டோ சதம்

அட..அட..அட... என்னா அடி... ஐபிஎல்-ல் முதல் சதம் விளாசினார் ஜானி பேர்ஸ்டோ... களத்தில் அவர் நின்னுட்டா, அடி எப்படி இருக்கும்-னு இந்த மேட்ச் ஆரம்பிக்கும் போது ஐஇ தமிழ் என்ன சொன்னதோ, அது இப்போ அப்படியே நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது.  

16:59 (IST)31 Mar 2019
கணிப்பு கண்ணாயிரத்திக்கு ஒரு 'தண்ணி பூரி' பார்சல்

என்னப்பா.. டபுள் மீனிங்-ல சொல்ற மாதிரி இருக்கு...

சே..சே.. பானி பூரியை தான் அப்படி சொன்னேன்-னே 

ஏன் இந்த புகழ்ச்சி?

நீங்க சொன்னது நடந்துடுச்சு!! வார்னர் - பேர்ஸ்டோ மெகா பார்ட்னர்ஷிப் போட்டு நின்னுட்டாங்க... இதோ, வார்னரும் இப்போ 50 அடிச்சிட்டாரு!!

16:51 (IST)31 Mar 2019
நமக்கே பரிதாபம்

கிராண்ட் ஹோம் பந்து வீச்சில், அடுத்தடுத்து இரு பிரம்மாண்ட சிக்ஸர்களை பேர்ஸ்டோ பறக்கவிட, மொயீன் அலி ஓவரில் வார்னர் சிக்ஸர் காட்ட, கோலி தலையில் கை வைப்பதை தவிர, வேறு வழி இருக்க முடியாது!.

16:42 (IST)31 Mar 2019
பேர்ஸ்டோ 50*

அண்ணே.. கணிப்பு அண்ணே... நீங்க சொன்னது போலவே நடக்குதேன்னே!! பேர்ஸ்டோ அடிச்சு பின்னிக்கிட்டு இருக்காப்ல!! பார்ட்னர்ஷிப்பை வேற பிரிக்க முடியல... நீங்க சொன்னது போல, 180+ ஸ்கோர் வந்துடுமோ?

நிச்சயமாக தம்பி...

16:35 (IST)31 Mar 2019
ஏதாவது பண்ணுங்க கோலி!

ஹைதராபாத் அணி 7 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்துள்ளது. இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்காத வரை, உங்களுக்கு ஆபத்து தான் கோலி... சீக்கிரம் ஏதாச்சும் பண்ணுங்க!

16:27 (IST)31 Mar 2019
மிரட்டும் ரன் ரேட்

ஹைதராபாத் அணி 4.5வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்துவிட்டது. வார்னர் - பேர்ஸ்டோ ஜோடி மட்டும் 12 - 13 ஓவர்கள் வரை நின்றுவிட்டால்.... வேண்டாம், வேண்டாம்... 10 ஓவர்கள் நின்றுவிட்டாலே, 180+ ஸ்கோர் கன்ஃபார்ம்.

16:20 (IST)31 Mar 2019
பெங்களூருக்கு இரக்கம் காட்டாத வார்னர்

பெங்களூரு அணிக்கு எதிராக வார்னர் இதுவரை அடித்துள்ள ரன்கள்

61(49)59(46)57(27)52(32)*58(25)92(50)69(38)14(8)

16:18 (IST)31 Mar 2019
பேர்ஸ்டோ அடி எப்படி இருக்கும் தெரியுமா?

இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை இவரது உண்மையான அதிரடி எடுபடவில்லை. அடிக்க ஆரம்பித்துவிட்டால், லென்த், லைன், பவுன்ஸ், ஷார்ட் பிட்ச், யார்க்கர்-னு எந்த பந்துக்கும் மரியாதை இருக்காது. இன்றாவது தனது விஸ்வரூபத்தை காட்டுவாரா?

16:06 (IST)31 Mar 2019
'வார்னிங்' வார்னர்

மொயீன் அலியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசப்பட, உமேஷ் ஓவரில் சிக்ஸரை பறக்கவிட்டு, தொடக்கத்திலேயே வார்னிங் விடுத்திருக்கிறார் வார்னர்...

கோலி... முழுச்சிக்கோ, தண்ணி குடுச்சிக்கோ!!

16:04 (IST)31 Mar 2019
அடங்கப்பா என்னா வெயிலு! ச்ச்சை!

சென்னையில் இப்போது 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீச, போட்டி நடக்கும் ஹைதராபாத்தில் தற்போது 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீசி வருகிறது.

16:00 (IST)31 Mar 2019
களத்தில் வார்னர்....

ஹைதராபாத் அணியின் ஓப்பனர்கள் வார்னர், பேர்ஸ்டோ களத்தில்.... மொயீன் அலி பவுலிங்...

15:55 (IST)31 Mar 2019
கணிப்பு கண்ணாயிரம்!

வணக்கம் கணிப்பு கண்ணாயிரம் அவர்களே...

இன்னைக்கு தான்பா எனக்கு முறையா வரவேற்பு கொடுத்திருக்க...!

இருக்காதே பின்னே... நீங்க Predict பண்றதுலாம் முக்கால்வாசி நடக்குது... அதான் இந்த மரியாதை...

இல்லனா?

அட அத விடுங்கண்ணே!!

இன்னைக்கு ஹைதராபாத் எவ்ளோ அடிக்கும், சொல்லுங்க?

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ் டோ, மனீஷ் பாண்டே... இந்த மூணு பேருல இரண்டு பேராவது நல்லா அடிச்சா 170+ அடிக்க வாய்ப்புள்ளது. இந்த மூவரும் ஃபெயிலியர் ஆனா, ஹைதராபாத் தோற்றேவிடும்!.

15:45 (IST)31 Mar 2019
ஐபிஎல் வரலாற்றில் இளம் வீரர்

16y 157d பிரயாஸ் ரே பர்மன்17y 011d முஜீப்-உர்-ரஹ்மான்17y 177d சர்ஃபராஸ் கான்17y 179d பிரதீப் சங்வன்17y 199d வாஷிங்டன் சுந்தர்

15:42 (IST)31 Mar 2019
பெங்களூரு பிளேயிங் XI

பார்த்திவ் படேல்(w), மொயீன் அலி, விராட் கோலி(c), ஏபி டி வில்லியர்ஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், கோலின் டி கிராண்ட்ஹோம், ஷிவம் துபே, பிரயாஸ் பர்மன், யுவேந்திர சாஹல், உமேஷ் யாதவ். முகமது சிராஜ்

15:39 (IST)31 Mar 2019
ஹைதராபாத் பிளேயிங் XI

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ(w), விஜய் ஷங்கர், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூஸுப் பதான், ரஷித் கான், முகமது நபி, புவனேஷ் குமார்(c), சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்

15:36 (IST)31 Mar 2019
டாஸ் வென்ற கோலி

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். முதலில் பேட்டிங் செய்து எவ்வளவு ஸ்கோர் அடித்தாலும், எதிரணி சேஸிங் செய்துவிடும் என்ற காரணமே இதற்கு காரணம். இன்னைக்கு ஒரு  தரமான சம்பவம் காத்திருக்கு!

15:25 (IST)31 Mar 2019
பேட்ஸ்மேன்களின் சொர்க்கம்

சென்னையிலேயே வெயில் இப்படி மண்டையை பொளக்குது.... ஹைதராபாத்தில் சொல்ல வேண்டுமா என்ன? தெலங்கானா-வில் வெயில் கொடுமையால் ஏகப்பட்டோர் பலியாவது வழக்கம். முட்டையை உடைத்து சாலையில் ஊற்றினால், 10 வினாடியில் ஆம்ப்லேட் ரெடி!. அப்படிப்பட்ட தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் தான் இப்போட்டி நடைபெறுகிறது. 

பிட்ச் ரிப்போர்ட் படி, பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தி விக்கெட் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15:15 (IST)31 Mar 2019
வணக்கம் விராட்டியன்ஸ்...

'எங்கள் அணி ஜெயிக்காவிட்டாலும், எங்கள் இதயங்களை வென்றுவிட்டது' என்று விராட் கோலி எனும் ஒற்றை ஆளுமைக்காக ஆர்சிபி அணியை ஆதரிக்கும் விராட்டியன்ஸ்களே, 'வார்னிங்' வார்னருக்காக சன்ரைசர்ஸ் அணியை ஆதரிக்கும் திமுக தொண்டர்களே.... சாரி ரசிகர்களே.... உங்கள் அனைவருக்கும் ஐஇ தமிழின் பிரத்யேக வணக்கங்கள்...

Web Title:

Ipl 2019 rcb vs srh live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close