IPL 2019 RR vs RCB: ஐபிஎல் 2019 தொடரில், நேற்று(ஏப்.30) இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், வெற்றி தோல்வி இன்றி போட்டி கைவிடப்பட்டது.
Live Blog
Advertisment
IPL 2019: RR vs RCB Playing 11
Highlights
Advertisment
Advertisements
00:28 (IST)01 May 2019
போட்டி கைவிடப்பட்டது
ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இறுதியில், தொடரை விட்டு முதல் அணியாக வெளியேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
00:07 (IST)01 May 2019
ஹாட்ரிக் கோபால்
ராஜஸ்தான் அணியின் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் என்று மூன்று சூரர்களை காலி செய்து, தனது முதல் ஐபிஎல் ஹாட்ரிக்கை கைப்பற்றினார்.
00:04 (IST)01 May 2019
63 ரன்கள் இலக்கு
பெங்களூரு அணி 5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் 1.3 ஓவர்கள் - 35/0 (3 X 4s; 3 X 6s) கடைசி 3.3 ஓவர்கள் - 27/7 (3 X 4s)
23:21 (IST)30 Apr 2019
5 ஓவர் போட்டி
ஒருவழியாக பெங்களூருவில் கிரிக்கெட் நடப்பது உறுதியாகி இருக்கிறது. 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கவிருக்கிறது. 11:26க்கு ஆட்டம் தொடங்குகிறது.
22:47 (IST)30 Apr 2019
மழை ஓய்ந்தது... ஆனால்?
மைதானத்தில் நீரை அகற்றும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிட்சில், பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது.
21:26 (IST)30 Apr 2019
மழை விட்டபாடில்லை
பெங்களூருவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. போட்டி இப்போதைக்கு ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை.
ஒருவேளை ஃபனி புயல் அப்படியாக்க போயிடுச்சா!!!?
20:30 (IST)30 Apr 2019
9.15க்கு மேல் தொடங்குமா?
8 மணிக்கு மேட்ச் ஆரம்பிச்சாலே 12 மணிக்கு முடிப்பாய்ங்க... இதுல 9.15 மணிக்கு மேல தான் மேட்ச் தொடங்க வாய்ப்பு இருக்குதாம்.
நீங்க ரெண்டு டீமும் நி ஜெயிச்சும் பிரயோஜனம் இல்லை. ஸோ, நான் விளையாடுறேன் என மழை நினைத்துவிட்டதோ என்னவோ!
பெங்களூரில் மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
19:41 (IST)30 Apr 2019
பெங்களூரு பேட்டிங்... டாஸ் போட பயிற்சி!
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். டாஸ் போது ஜாலியான விரக்தியோடு பேசிய கோலி, 'நான் டாஸ் போட பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
Highlights