IPL 2019 starts today : 2008 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியின் 12 ஆவது சீசன் சென்னையின் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரை போட்டி என்று சொல்வதை விட திருவிழா என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு ஐபிஎல் தொடர்கள் மீது ரசிகர்கள் பித்து பிடித்து சுற்றுகின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட துவக்க விழாவுடன் துவங்க இருக்கும் ஐபிஎல் திருவிழா 12 ஆவது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். சென்னை அணியை பொருத்தவரை அம்பத்தி ராயுடு, மற்றும் ஷேன் வாட்சனை தொடக்க வீரராக களமிறங்குகின்றனர். சுரேஷ் ரெய்னா மூன்றாவதாகவும், தோனி நான்காவதாகவும் களமிறங்க உள்ளனர். ஆல்ரவுண்டர் ஜடேஜா, கேதர் ஜாதவ், பிராவோ போன்ற வீரர்களால் சென்னை அணி கூடுதல் பலத்துடன் உள்ளது.
இதேபோன்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். இதனால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் கிடைக்கும் வருமானம் முழுவதும் புல்வாமா தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது
ஐபிஎல் பல சுவாரசியமான ஞாபகங்களை நமக்கு தந்துள்ளது. இந்த சீசன் பொறுத்த வரையில் பல வீரர்களுக்கு இது முக்கியமானவை ஆகும். ஏனென்றால் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 3 மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க மற்றும் மெருகேத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஐபிஎல் சீசன் தான் உலகக்கோப்பைக்கு முன்பாக நடக்க இருக்கும் முதல் தொடர். ஆகவே இதற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பேட்ஸ்மேன்களே அதிகளவு ஆதிக்கம் செலுத்துவார்கள்.
அதே போல் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் சென்னை அணி விளையாடும் போட்டிகளைப் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் ரயில்வே நிர்வாக பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
read more.. முதல் ஆட்டமே ‘தல’ கோட்டையில்! 'லைவ்’ பார்க்க வேண்டுமா?
மார்ச் 23 மற்றும் 31ஆம் தேதிகளில் இயக்கப்படும் இரண்டு சிறப்பு ரயில்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.மார்ச் 23ஆம் தேதி சென்னை பீச் - வேளச்சேரி சிறப்பு பாசஞ்சர் ரயில் மற்றும் வேளச்சேரி - சென்னை போர்ட் சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 23 ரயில் நிலவரம் :
சென்னை பீச் - வேளச்சேரி சிறப்பு பாசஞ்சர்
ரயில் நிலையம் : நேரம்
சென்னை பீச் :இரவு 10.50
சேப்பாக்கம் :இரவு 11 / 12 மணி
திருமயிலை :நள்ளிரவு 12. 9 மணி
வேளச்சேரி :நள்ளிரவு 12.35 மணி
வேளச்சேரி - சென்னை போர்ட் சிறப்பு பாசஞ்சர்
ரயில் நிலையம் : நேரம்
வேளச்சேரி : இரவு 11.25 மணி
திருமயிலை : இரவு 11.45 மணி
சேப்பாக்கம் : இரவு 11.55 / 12.03 மணி
சென்னை போர்ட் :நள்ளிரவு 12.10 மணி