சென்னை வந்தார் "தல" தோனி - ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா!
Dhoni in Chennai : சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே புறப்பட உள்ளதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dhoni in Chennai : சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே புறப்பட உள்ளதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, கொரோனா சோதனையில் தேறியதை தொடர்ந்து, பயிற்சி முகாமில் பங்கேற்க இன்று சென்னை வந்தார்.
Advertisment
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 13வது ஐ.பி.எல்., சீசன், வரும் செப். 19 முதல் நவ. 10 வரை நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சென்னை அணியின் 6 நாள் பயிற்சி முகாம் நாளை ( ஆகஸ்ட் 15ம் தேதி) சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.
இதற்கு முன் சென்னை அணி வீரர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு விதிப்படி கேப்டன் சோதனை நடத்தப்பட்டது. ராஞ்சியில் உள்ள தோனி வீட்டுக்கு வந்து சோதனை மாதிரிகளை பெற்றுச் சென்றனர். எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த முடிவு மாலையில் வெளியானது. இதில் தோனிக்கு நெகட்டிவ் என தெரிந்தது. இதையடுத்து திட்டமிபட்டபடி பயிற்சி முகாமில் பங்கேற்க, இன்று சென்னை வந்தார்.
Advertisment
Advertisements
தோனியை தவிர்த்து, சுரேஷ் ரெய்னா. கரண் சர்மா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா மற்றும் மோனு குமார் ஆகியோர் சென்னையில் ஒருவாரம் பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றனர்.
சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே புறப்பட உள்ளதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil