IPL 2020 CSK captain MS Dhoni arrived Chennai : வருகின்ற 29ம் தேதி முதல் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சார்பில் விளையாட இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சி.எஸ்.கேவின் கேப்டனுமான தோனி சென்னை வந்துள்ளார்.
2019ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு தோனியின் ஆட்டத்தை பார்க்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தியே சிக்ஸ் அடித்து போன்று தான் இருக்கிறது.
உற்சாகம் அடைந்த ரசிகர்கள்
மிஸ்டர் கூல், கூல் கேப்டன், தலைவா, ராஜா, தன்னோட ஏரியாவுக்கு திரும்பி வந்த சிங்கம்னு எல்லாரும் வரவேற்க காரணங்கள் உண்டு. ஆனா கிரவுண்ட்ல தோனி நிக்காம இருந்த இத்தனை நாட்கள் சி.எஸ்.கே ஃபேன்ஸ்க்கு எவ்வளவு வலியானதுனு உங்களுக்கு தெரியாது பாஸ். அவ்வளவு நாள் காத்திருப்பு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"