துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த பந்து விச்சாளர் உட்படம் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த பந்து விச்சாளர் உட்படம் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisment
ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க துபாய் சென்றனர். அங்கே அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஒரு பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளதால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் போட்டிக்கு முன்னதாக துபாயில் தனிமைப் படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
“ஆமாம், சமீபத்தில் இந்தியாவுக்காக விளையாடிய ஒரு வலது கை மித வேகப்பந்து வீச்சாளரும் அணியின் ஒரு சில ஊழியர்களும் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று ஐபிஎல் வட்டாரத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், “எங்களுக்குத் தெரிந்தவரை, சி.எஸ்.கே நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் மற்றும் அவரது மனைவி, அவர்களது சமூக ஊடகக் குழுவில் குறைந்தது 2 உறுப்பினர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுளனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சுற்றுப்பயணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை செப்டம்பர் 1 வரை நீட்டிக்க வேண்டிய நிலைக்கு சி.எஸ்.கே. தள்ளப்பட்டுள்ளது.
பி.சி.சி.ஐ.யின் நிலையான இயக்க நடைமுறைகளின்படி (எஸ்ஓபி) படி, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் கூடுதலாக 7 நாள் தனிமைப்படுத்தலுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
தனிமைப்படுத்தலுக்குப் பிறகு நடத்தப்படும் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்த பிறகே, அவர்கள் மீண்டும் பாதுகாப்பான இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"