Advertisment

IPL 2020: இறுதிப் போட்டி தேதி மாற்றம்; 10 Double-Headers ஆட்டங்கள்

ஐபிஎல் போட்டிகள், துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும்

author-image
WebDesk
New Update
IPL 2020: இறுதிப் போட்டி தேதி மாற்றம்; 10 Double-Headers ஆட்டங்கள்

கொரோனா தொற்று ஏற்பட்டால், மாற்று வீரரை அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம்

IPL 2020 IN UAE: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisment

ஒருபக்கம் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்க, அதற்கு மருந்தே இல்லாமல் பலரும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க, மறுபக்கம் ஐபிஎல் 2020 தொடர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) தொடங்க உள்ளது என்றும், நவம்பர் 8 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கடந்த வாரம் கூறியிருந்தார். மேலும், ஐபிஎல் ஆட்சி மன்றக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்பட்டு அட்டவணை இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், இன்று நடந்த ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில், செப். 19 முதல் நவ. 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2020 முக்கிய அறிவிப்புகள்

மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு போட்டியும், இரவு 7.30 IST மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில், மொத்தம் 10 double-headers போட்டிகள் நடைபெறவுள்ளன. அதாவது, ஒரே நாளில் இரண்டு போட்டிகள் என்ற கணக்கில், மொத்தம் 10 double-headersஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதில், முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 IST மணிக்கு தொடங்குகிறது.

ஒவ்வொரு அணியிலும் தலா 24 வீரர்கள் இருக்க வேண்டும்.

போட்டிகள், துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும்.

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக விவோ நீடிக்கும்,

தொடரின் போது, வீரர்கள் எவருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், மாற்று வீரரை அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம்.

போட்டியின் முழு அட்டவணை நாளை (ஆக.3) வெளியிடப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment