Advertisment

கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்

7 சீசன்களில் விளையாடி வெறும் 108 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளாதால் அவருடைய பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது.

author-image
WebDesk
Oct 16, 2020 16:27 IST
IPL 2020 Dinesh Karthik steps down as KKR Captain

IPL 2020 Dinesh Karthik steps down as KKR Captain : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஐ.பி.எல். கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே, துபாயில் நடைபெற்று வருகிறது. அணிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இந்த தொடர் நடைபெற்று வருகிறது.

Advertisment

கடந்த சீசன்களில் கலந்து கொண்ட பல வீரர்களும் இந்த ஆண்டில் ஆப்செண்ட் ஆனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இயான் கார்த்தி கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது கொல்கத்தா அணி. தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த விரும்புவதால் இப்பொறுப்பில் இருந்து விலக விரும்புதாக அவர் கூறியது தெரிய வந்துள்ளது.

இது வரை இரண்டு முறை பட்டத்தை தட்டிச் சென்ற இந்த அணியின் கேப்டனாக, கௌதம் காம்பீருக்கு பிறகு 2018ம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆனால் 7 சீசன்களில் விளையாடி வெறும் 108 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளாதால் அவருடைய பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. அதே போன்று கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் கொல்கத்தா அணி 5வது இடம் பிடித்ததும் தினேஷின் கேப்டன்சியை சர்ச்சைக்கு உள்ளாக்கியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment