8வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக வீரர்கள் அனைவரும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 6 பந்துகளையும் 6 பவுலர்களைப் போல பந்து வீசி அசத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 8வது ஐபிஎல் போட்டிகள் துபாயிலும் ஐக்கிய அரபு எமிரேட்டிலும் நடைபெற உள்ளது. 8வது ஐபிஎல் தொடரில் விளையாட ஐபிஎல் அணிகள் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டில் தீவிர வளையிப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்டில் செப்டம்பர் 19ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நடைபெற உள்ளது. இதனால், இரு அணி வீரர்களும் தீவிர வளைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, எதிரணி வீரர்களை நிலைகுலைய வைக்க தீவிர வலைப் பயிற்சியில் பந்துவீசி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பும்ரா பந்துவீசி பயிற்சியில் ஈடுபடும்போது, அவர் சக வீரர்களுடன் ஜாலியாக ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு வீரர்களைப் போல பந்துவீசி அசத்தியுள்ளார். அந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
வீடியோவில், வேகமாக ஓடிவரும் பும்ரா முதலில் இலங்கை வீரர் லசித் மலிங்கா போல பந்து வீசுகிறார். அதன் பிறகு, முனாஃப் படேல், மிட்செல் ஸ்டார்க், கேதார் ஜாதவ், அமித் மிஸ்ரா, அனில் கும்ப்ளே போல பந்து வீசுகிறார். மற்றவர்களின் பார்வையில் இது வேறுபடவும் செய்யலாம். ஆனால், பும்ரா ஒரு ஓவரின் 6 பந்துகளையும் 6 பவுலர்களைப் போல ஜாலியாக வீசி அசத்தியுள்ளார். கூடுதலாக 7வதாக ஒரு பந்தையும் வீசுகிறார். அது யாரைப் போல இருக்கிறது கூறுங்கள் பார்ப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"