IPL 2020 live Streaming: இந்தியன் பிரீமியர் லீக்கின் 13வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட தயாராகிவிட்டன. ஐபிஎல் ஆரம்பமாக உள்ள நிலையில் ஒவ்வொரு ரசிகர்களும் ஆர்வத்தில் இருக்கின்றனர். இந்தியாவை தாண்டி உள்ள ரசிகர்களும் கண்டுகளிக்கும் வகையில் ஐபிஎல் 2020 போட்டிகள், 120 நாடுகளில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல்-ன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரும், உலகளாவிய உரிமைதாரருமான ஸ்டார் இந்தியா இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி, இந்திய துணை கண்டம் முதல் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளின் ரசிகர்களுக்கும் லைவ் சேவை கொடுக்கப்பட உள்ளது. இந்தியாவில் 9 வெவ்வேறு மொழிகளில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம்- இந்தி தவிர, தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி எச்டி மற்றும் எஸ்டி சேனல்களில் இந்தி கமெண்ட்ரி உடன் லைவ் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன.
ஆங்கில கமெண்ட்ரி உடன் கூடிய லைவ் ஒளிபரப்பு மற்ற அனைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கட்டண சேனல்களிலும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோக, பிராந்திய மொழிகளான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கன்னடம் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெங்காலி சேனல்களிலும், மராத்தி மொழியில் ஸ்டார் பிரவா சேனல் மற்றும் மலையாளத்தில் ஏசியா நெட் பிளஸ் சேனலிலும் போட்டிகள் ஒளிபரப்பப்பட இருக்கின்றன.
இதுதவிர இங்கிலாந்து, அயர்லாந்து, அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் போட்டிகள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அந்த நாட்டு ஸ்போர்ட்ஸ் சேனல்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப் மூலமாகவும் லைவ் செய்யப்பட உள்ளது. எனினும், பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"