மிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ

டிரண்ட் பவுல்ட் வீசிய பந்து ஸ்டம்பை பதம் பாக்கும் வீடியோ ஒன்றை  மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ளது.

By: September 13, 2020, 9:47:23 PM

ஐபிஎல் போட்டி பயற்சியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் டிரண்ட் பவுல்ட் ஸ்டெம்பை பாதியாக உடைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வரும் செப்டம்பர் 19-ம் தேதியில் இருந்து ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக, கேப்டன் தோனியை கவுரவிக்கும் வகையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாத்தி கம்மிங் தோனி வெர்சன் பாடலை வெளியிட்டது.

இதனை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி  பயிற்சியின்போது ரோஹித் சர்மா அடித்த சிக்ஸ்  அதிரடியாக ஸ்டேடியத்தை தாண்டி பறக்கும் வீடியோ ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டரில் வெளியிட்டது.

தற்போது,  மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரண்ட் பவுல்ட் வீசிய பந்து ஸ்டம்பை பதம் பாக்கும் வீடியோ ஒன்றை  மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ளது.

 

 

‘CLEAN BOULT! Trent has arrived’ என்ற கேப்ஷனையும் மும்பை இந்தியன்ஸ் அணி பகிர்ந்துள்ளது.  இந்த வீடியோவிற்கு, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ என இரு அணி ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

 

 

 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் துபாயிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ipl 2020 mumbai indians trent boult bowling viral clip

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X